இலங்கையில் தனி தமிழீழம் கோரி போராடி வந்த தமிழர்களுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இன்று 8வது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புலம் பெயர் நாடுகளிலும் ஈழ மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் தமிழீழம் கோரி போராடி வந்த தமிழகர்கள் மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சாவின் ராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடத்தி கொத்து குண்டுகளால் கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அரஜாகம் மிருகத்தனமான தாக்குதல்களை ஆண்டுகள் பலவானாலும் இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்கள் என்றும் பாரமால் அவமானப்படுத்தி,அசிங்கப்படுத்தி, களங்கப்படுத்தி கொன்றனர்.பிஞ்சு குழந்தைகளை எமது அடுத்த தலை முறைகளை கொன்று குவித்தார்கள் இந்த கொடூர நினைவுகளை ஏந்தி தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒழுங்கமைப்பில் பிரித்தானியாவில் இன்று மதியம் 2 மணிக்கு 10 downing street முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது மிகவும் உணர்வுபூர்வமாக தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு அஞ்சலிநிகழ்வுகள் ஆரம்பமாகியது ,இந்த நிகழ்வில் நினைவுச்சுடரினை முன்னாள் போராளி சத்தீஸ்கர் அவர்கள் ஏற்றி வைக்க ,தமிழீழ தேசிய கொடியினை 2009 வரை முள்ளிவாய்க்காலில் மண்ணில் போராடிய போராளி அருள்மாறன் அவர்கள் ஏற்றிவைக்க பிரித்தானிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல் செயட்பாட்டாளர்களில் ஒருவரான லக்சன் தர்மலிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமாகி தொடர்ந்து மக்களால் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் நடைபெற்றன தொடர்ந்து இறுதிவரை தமிழீழ மண்ணில் இன்னல்களையும் சிங்கள இனவெறியனின் அடக்குமுறைகளையும் நேரில் கண்டு புலம்பெயர்ந்த உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவு கவிதைகளும்,பாடல்களும் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
தகவல் ,படங்கள் – அசோக்