பிரித்தானிய பிரதமருக்கான மனு

1215

இலங்கையில் ஆட்சிக்கு வரும் அனைத்து சிங்கள அரசுகளும் இடைவிடாமல் பல வழிமுறைகளில் ஈழ தமிழர்களின் மீதான இனப்படுகொலையை முன்னெடுத்து வருகிறார்கள். இதை உலகம் கண்டும் காணாதமாதிரி நடந்து கொள்கிறது.

பொதுநலவாய மாநாடு அடுத்த மாதம் நடக்க இலங்கையில் இருக்கிறது. இது இலங்கையில் நடப்பதினால், தமிழர்களின் மீதான இனப்படுகொலை மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழ தமிழர்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். கனடா இந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளது. தமிழ் நாட்டிலும் பல போராடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, அதேபோல தியாகு ஐயா அவர்கள் கடந்த பல நாட்களாக இவ் வயதிலும் உண்ணாவிரதம் இருக்கின்றார். பிரித்தானியாவையும் புறக்கணிக்க வைப்பதற்கு பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் இளையோர் அமைப்பு சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

நாம் எமது பிரசாரங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் பிரித்தானிய பிரதமர் அவர்களுக்கான ஒரு மனுவை அனுப்புவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். கீழ் உள்ள இணைப்பை அழுத்தி உங்கள் கையொப்பங்களையும் பதிவுசெய்து கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

https://www.change.org/en-GB/petitions/petitioning-to-uk-prime-minister-prime-minister-david-cameron-should-uphold-commonwealth-values-and-boycott-the-commonwealth-summit-in-sri-lanka

தமிழரின் தாகம் தமிழ்ஈழ தாயகம்


Media Team
Tamil Youth Organisation United Kingdom (TYOUK)
Empowering youth to excel as leaders and architects of our nation.