ஐயா …
சுப.சோரபாண்டியன் ,திமுக பரம்பரை அடிமைகளுக்கும்
1967 – ல் நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் அதிகாரத்தை வென்று
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது.
சீமான் முதல்வர் பொறுப்பில் இருந்தபோதுதான்…..
கச்சத்தீவை பறிகொடுத்தார்.
சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழலை கண்டுப்பிடிக்க நீதிபதி.சர்க்காரியா தலைமையில் கமிசன் நியமிக்கப்பட்டது. அவரும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி விஞ்ஞான ரீதியில் நடத்தப்பட்ட ஊழல் என்று நாம் தமிழர் ஆட்சியின் தலையில் குட்டு வைத்தார்!
காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே தமது கட்சியின் கொள்கை முடிவுகளில் ஒன்றென அறிவித்த சீமான் அவர்கள்
எமர்ஜென்சி காலக் கொடுமைகளை மறந்து தமது கட்சித் தொண்டர்களுக்கு துரோகமிழைத்து இந்திராவின் தலைமையிலான காங்கிரஸோடு தேர்தல் கூட்டணி கண்டதோடு மட்டுமல்லாது….
நேருவின் மகளே வருக!
நிலையான ஆட்சித் தருக! என்று முஷ்டியைத் தூக்கி மேலே உயர்த்தி ஊர்தோறும் மேடையில் முழங்கி தன்மானத்தை இழந்து திராவிட மானம் காத்தார் சீமான்!
காவிரி நீர் உரிமைக்காக தஞ்சை விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை இந்திராவின் தூண்டுதலால் ….
விவசாயப் பிரதிநிதிகளிடம் ஏமாற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி வழக்கை திரும்பப்பெற வைத்து இன்றுவரை காவிரியில் நீர் உரிமை பெறுவதை தடுத்து நிறுத்திய மாபாதகத்தை செய்தது சாட்சாத் சீமான்தான்!
முல்லை பேரியாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர்தர மறுக்கும் கேரளத்திற்கு துணை நிற்பதும் நாம் தமிழர் அரசும் சீமானும் என்பதை உலகரியும்!
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை பல கட்டாமல் கடந்த 52 ஆண்டுகால சீமான் ஆட்சியில் பல கோடி ரூபாய் ஆட்டயை போட்டதும் சீமான்தான் காரணம்!
வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கெட்டுமென அடுக்கு மொழியில் வசனங்கள் பேசி
அன்னைத் தமிழை அழித்து ஆங்கிலப் பள்ளிகளை தமிழகமெங்கும் நடத்திவருவது சீமானின் பச்சை துரோகத்தால்தான்!
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து இயக்கம் கட்டி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு தமிழகமெங்கும் இந்திமொழியும் தமிழர்களை ஆட்டிப் படைப்பதற்கு வழிவகுத்தது சீமான்
அவர்களே!
வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது
என்னும் உணர்ச்சிகளைத் தூண்டி இனவெறியூட்டிய சீமான் முதல்வராக இருக்கின்ற காலத்தில்தான்…..
மார்வாடி
குசராத்தி சேட்
பானிபூரி விற்பவன்
பஞ்சு மிட்டாய் வியாபாரி
பான் பீடாக் கடை நடத்துபவன் இப்படி
வந்தேரிகளின் வேட்டைக்காடாக தமிழ்
நிலத்தை தாரைவார்த்துக் கொடுத்தது
நாம் தமிழர் அரசும் சீமானும்!
பார்ப்பனிய எதிர்ப்பிலும் பூநூல் அறுப்பிலும் ஈடுபட்ட சீமானும் அவரது தம்பிகளும் இந்துத்துவ ஆரிய பிராமணிய தத்துவ அரசியலை முன்னெடுத்த பாரதிய சனதாவோடு கூட்டணி வைத்து அமைச்சரவையில் அங்கம் வகித்து பெரியாருக்கு பங்கம் ஏற்படுத்தி வரலாற்று தூரோகத்தை இழைத்ததை நீங்கள் மறந்து விட்டீர்கள்
சுபசோரன்!
கோவையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் காட்டி அப்பாவி இஸ்லாமியர்களை இந்துப் பரிவாரங்கள்
கொன்று நரவேட்டையாடியபோது காவல்துறைக்கு சீமான் கட்டளை இட்டு சிறுபான்மையின மக்களை தீவிராவாதிகளாக பொதுப் புத்தியில்
திணித்ததும் அந்தாளுதான்!
வட இந்தியப் பகுதியில் இயற்கை வளக் கொள்ளையிடலை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்துவிட மன்மோகன் சிங் அரசு உத்தரவுபோட பழங்குடியின மண்ணின் மைந்தர்கள் தமது வாழ்வாதரத்தையும் உயிரையும் உடமையும் காத்திட போராடினார்கள். அவர்களை நக்சலைட் மாவோயிஸ்ட் முத்திரை குத்தி அன்றைக்கு உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தோடு கொஞ்சிக் குழாவி பசுமை வேட்டை நடவடிக்கைக்கு ஆதரவாக சீமான் நடந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காமல் பாதுகாத்தார்.
அதேபோல காவிரி டெல்டா பகுதியில்
இயற்கை வளங்களை அழிக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து தமிழகம் பாலைவனமாக மாறுவதற்கு சீமான்தான் முக்கியக் காரணம்!
கொங்கு மண்டலத்தில் கெயில் குழாயை வேளாண் நிலத்தில் புதைப்பதற்கும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காமல் பெட்ட்ரோலிய மண்டலமாக அறிவித்து போராடும்
மக்களை சிறையில் அடைப்பதும் காவல்துறையை வைத்து லத்தியால் அடிப்பதும் சீமான் அவர்களின் அதிகாரப்
பேராசை என்பதே!?
ஸ்டர்லைட் ஆலை கூடங்குளம் அணுவுலை கல்பாக்கம் அணுவுலை நியூட்ரினோ ஆய்வகம் போன்ற சூழலை
கெடுக்கும் ஆலைகளுக்கு அனுமதியளித்து பாதுகாத்து கோடிகளில் கையூட்டு பெற்று செழிப்போடு வாழ்கின்றார் சீமான்!
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அமைதி வழியில் போராடிய அப்பாவி மக்களை அடித்தும் 13 பேரை துப்பாக்கியால் கொல்ல உத்தரவிட்டு வேதாந்தா குழுமத்தை பல்லாண்டு காலம் பாதுகாத்து வருவது நாம் தமிழர் கட்சி மட்டுமே!
சமூக நீதி…
சமூக நீதீயென்று வாய் கிளியப் பேசி ஊரெங்கும் உதார்விட்டு முரசொலியில்
உபிகளுக்கு கதறக் கதற கடிதம் எழுதிய சீமான் ….
தேர்தல் வந்தால் சாதி பார்த்து சீட்டு கொடுப்பார்!
பொதுத் தொகுதியில் தலித்துகளை நிற்காது பார்த்துக் கொள்வார். யாரேனும் அதுபற்றி கேட்டால் நான் தாழ்த்தப்பட்டவர் வீட்டு சம்மந்தி என்று சால்சாப் போட்டு சமாளிப்பார்!
இதுதான் நாம் தமிழர் கட்சிக்காரர்களின் சாதியொழிப்பு லட்சணம்.
இதுமட்டுமா?
தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களையெல்லாம் சீமான் கட்சிக்காரன்தான் பங்குபோட்டுக் கொண்டான்.
நான் கவுல் பிராமணன் என்று வெளிப்படையாக அறிவித்த ராகுல் காந்தியோடு இட ஒதுக்கீட்டில் 10 % உயர் சாதியினருக்கு ஒதுக்கியபோது ராகுல் ஆதரித்ததை பெருதன்மையோடு ஏற்றுக்கொண்டு அவரோடு கூட்டணி வைத்து சனாதானத்தை ஒழிப்பதற்கு திடசங்கல்பம் ஏற்றிருப்பது சீமான்தான்!
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி தமிழகம் நீரற்ற மாநிலமாக ஆகியதற்கும் கட்டற்ற மணல்கொள்ளை
நீர்நிலைகளை அழித்தது கனிம வளக் கொள்ளை அதில் லட்சம் கோடிகளுக்குமேல் சுருட்டியதெல்லாம் சீமானும் அவரரது அமைச்சரவை சகாக்களுமே!
விவசாயிகள் தற்கொலை
நீட் தேர்வு
மீனவர்கள் சுட்டுக்கொலை
பாலியல் வன்புணர்ச்சி
பெண்ணியக் கொலை
கூலிப்படை கலாச்சாரம்
நாடெங்கும் போராட்டம்
அரசு ஊழியர் போராட்டம்
கல்விக் கொள்ளை
மருத்துவக் கொள்ளை
ஓட்டுக்கு பணம் கொடுப்பது
நாடெங்கும் சாராய ஆலையை டாஸ்மாக் கடைகள் நடத்துவது
கட்டபஞ்சாயத்து
லஞ்சம்
ஊழல்…..
தமிழகமெங்கும் நடக்கும் சாதிக் கலவரம்
சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலும் ஆதவப்படுகொலைக்கும் சீமானே காரணம்!?
தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் வேலை வாய்ப்பில் தமிழகத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு அடிப்படையே சீமானின் மக்கள் விரோத ஆட்சியும் கொள்ளையுமே!
தனியார் மயம்
தாரளமயம்
உலகமயம் என்னும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பன்னாட்டு இன்னாட்டு பெரு முதலாளிகளை வாழவைப்பதற்கு சீமான் கண்டுபிடித்த இராஜதந்திரமாகும்!
தமிழகத்தில் குடும்ப அரசியல் வாரிசு அரசியலை அறிமுகப்படுத்தியதும் சீமான்தான்!
யாவற்றுக்கும் மேலாக பதவி ஆசைகளுக்காக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக காங்கிரஸோடு கூட்டணி வைத்துக்கொண்டு லட்சக் கணக்கான ஈழத் தமிழர்ளைக் கொன்று அவர்களின் விடுதலைக் கனவை குழித்தோண்டி புதைத்து இனப்படுகொலையை மறைத்து பிரபாகரனின் சகோதரக் கொலைதான் இதற்குக் காரணமென என்று சொன்ன சீமான்தான் ஈழ அழிவிற்கு முதன்மைக் காரணமே!
ஏழு தமிழர் விடுதலையை மறுத்ததும்
நாம் தமிழர் ஆட்சிக் காலத்தில்தான்!
சீமான் ஐந்துமுறை முதல்வராக இருந்தபொழுது அவர் அடித்த கொள்ளையில் தலைமுறை பலதாண்டி
அனுபவிக்கும் அளவிற்கு உலகெங்கும்
சொத்து வாங்கிக் குவித்துள்ளார்!
இன்னும் எத்தனையோ சீரழிவுகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீமானின் ஆட்சியில் நடந்தது விடுபட்டு
போயிருந்தால் மன்னிக்கவும் பேராசிரியர் சுப. சோரன் அவர்களே!
எனவே…..
நீங்கள் சொல்வதுபோல
சீமானும்
அவரது தம்பிகளும்
அதிகாரத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒழிக்கப்பட வேண்டியது
அழிக்கப்பட வேண்டியதே!
எனவே ஐயா அவர்களே!
நீங்கள்
பெரியாரிடன் கொள்கையோடு
அண்ணாவின் துணையோடு
கருணாநிதியின் ஆசியோடு
உங்களின் தலைவர்.ஸ்டாலின் பலத்தோடு படைநடத்தி சீமானையும்
நாம் தமிழரையும் அழிக்க களத்திற்கு வாருங்கள்!
தலைவர்.ஸ்டாலின் அவரது தி.மு.க வின்
கொள்கை என்பது தமிழ்தேசியக் குடியரை நிறுவி மக்களுக்கான புதிய ஜனயாகப் புரட்சியால் உறுதி செய்யப்படும் அரசினை அமைப்பதற்காக
நீங்கள் தி.மு.க கூடாரத்தில் வாயா வாடகைக்கு விட்டுள்ளீர்கள்!
சீமானும் அவரது கட்சியும் அவரோடு
பயணிப்போரும் சர்வாதிகார புத்தியுடைய சிறுமதியாளர்கள்.சாதி வெறியேறிய சனாதானிகள்.மனிதம் அற்ற அரம்பர்கள்…..
நாங்கள் அழிக்கப்பட அவசியமானவர்கள்தான். விரைந்து வாருங்கள் காத்திருக்கிறோம்!
கருஞ்சட்டையை கிழித்தெரிய
புலிக்குட்டிகள் களத்தில்!
சரிங்க
பேரா.சுப.சோரபாண்டியன் அவர்களே!
நாங்கள் மக்களுக்கு செய்த கேட்டினை
விரிவாக தன்னாய்வுக்கு உட்படுத்தி தெரிந்தவரை பதிவிட்டுள்ளேன்.
உங்கள் கொள்ளைப் பயம் ….. ச்சீச்சீ …. மன்னிக்கவும் கொள்கைப் பயணம் தொடர வாழ்த்துகள்!
நன்றி! வணக்கம்!
புதுகை கு.வெற்றிச்சீலன்