பெருமெடுப்பிலான பெளத்த மத திணிப்பு முற்றுகையினுள் தமிழீழம்

119

இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் , தமிழ பேசும் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய வாழ்விடம் சார்ந்த தொன்மைகள் – தொன்மைச்சான்றுகளை சிதைத்து பௌத்த மத திணிப்பை 2010 ஆம் ஆண்டு தொடக்கம் செய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மட்டும் 82 இடங்களை இதுவரை தொல்லியல் ரீதியாக பாதுகாக்க வேண்டிய இடங்களாக அறிவித்து இருக்கிறார்கள் . இதில்

1. முல்லைத்தீவு மாவட்டம் : 47 இடங்கள்

2. மன்னார் மாவட்டம் : 19 இடங்கள்

3. யாழ்ப்பாண மாவட்டம் : 9 இடங்கள்

4. வவுனியா மாவட்டம் : 7 இடங்கள் ஆகியன அடங்குகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ள 47 இடங்களில் ஒரு சில இடங்களை தவற சகல இடங்களிலும் பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் சிதைவுகள் தமிழ் சைவ ஆலய வளாகங்கள் உட்பட்ட பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது.

1. இரணைமடு கிராமம் (அம்பகாமம்)

2. முத்தையன்கட்டுக்குளம்

3. தண்ணிமுறிப்புக்குளம்

4. கற்சிலைமடு

5. பண்டாரவன்னி கிராமம்

6. கனகரத்தினபுரம்

7. பேராறு (முத்தையன்கட்டுக்குளம் )

8. ஸ்ரீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில்

9. மண்ணாகண்டல்

10. தொலிச்சமோட்டை கிராமம்

11. ஓதியமலை கிராமம்

12. ஜனகபுர கிராமம்

13. மஹபிடிய கிராமம் (மணலாறு)

14. குமுழமுனை பிள்ளையார் கோவில்

15. கும்பகர்ணன் மலை

16. தண்ணிமுறிப்புகுள கிராம குளம்

17.ஆண்டாங்குளம்

18. தட்டுவன்கொட்டி கிராமம்

19. கிரிஇப்பன்வெவ கிராமம்

20. வண்ணாத்திப்பாலம்

21. ,மணலாறு (மகாசாயா ஆலய சூழல்)

22. கொக்கிளாய்

23. நவமொரவெவ

24. கிரிஇப்பன்வெவ தென்கரையோர கிராமம்

25. வன்னேரி குளம்

26. முத்தையன்கட்டு படைப்பயிற்சி பூமி

27. கொல்லன்குளம் நாகதம்பிரான் கோவில்

28. பறங்கி ஆறு

29. சிராட்டிகுளம்

30. முல்லைத்தீவு பொதுச்சந்தை

31. மூன்றுமுறிப்பு கிராமம்

32. பெரியகுளம்

33. வன்னிவிளாங்குளம்

34. பூவரசம்குளம் பத்திரகாளி அம்மன் கோவில்

35. பாண்டியன்குளம் சிவன் கோவில்

36. வினாயகபுரம்

37.நெலும்வெவ

38.செம்மலை(செட்டிமலை)

39. ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரம் கோவில்

40. முள்ளிக்குளம்,

மன்னார் மாவட்டத்தில் பின்வரும் இடங்களில் பௌத்த மதம் தொடர்பான பண்டைய சிதைவுகள் காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்து இருக்கிறது.

1. வலயன்கட்டு கிராமம் (சின்னவலயன்கட்டு )

2. மருதமடு கிராமம்

3. கொல்லன்குளம் கிராம்

4. இலந்தைக்குளம் கிராமம்

6. முல்லிகுளம் கிராமம்

7. தேவபுரம் கிராமம்

8. செங்கலபிட்டி கிராமம்

9. ஒட்டன்குளம்

10. பெரியகுஞ்சிகுளம் கிராமம்

11. தேக்கம் கிராமம்

12. நாரப்பாடு கிராமம்

13. பெரிய கரிசல் கிராமம்

14. திருக்கேதீஸ்வரம் கோவில்

15. இரணை இலுப்பைக்குளம்

16. நானாட்டான் கிராமம்

17. அரிப்பு கிராமம் (அரிப்பு கிழக்கு )

18. முத்தரிப்புதுறை கிராமம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 இடங்களில் தொல்லியல் ரீதியாக பாதுகாக்க வேண்டிய பண்டைய நாகரிக எச்சங்கள்/ சிதைவுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்து இருக்கிறது

1.சுன்னாகம் பொதுச்சந்தை

2. மயிலிட்டி தெற்கு

3. காங்கேசன்துறை

4. நெடுந்தீவு கிராமம்

5.அல்லைப்பிட்டி

6. அல்லைப்பிட்டி கடற்கரை

7. நெடுந்தீவு தெற்கு

8. அல்வாய் கிழக்கு

9. பழைய பூங்கா

அதேபோல வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு , மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு, மருதோடை, பனைநிண்டான், நிகவெவ போன்ற கிராமங்களில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்கிற தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோட்பாட்டை சிதைத்து இலங்கை தீபகற்பம் சிங்களவர்களுக்கு உரியது என்கிற மகாவம்ச கோட்பாட்டை நிரூபிக்க 2010 ஆம் ஆண்டு தொடக்கம் பதவியில் இருந்த அரசாங்கங்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. அதில் அவர்கள் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

இனமொன்றின் குரல்