பொருளாதாரத்தை மொத்தமாக ஏப்பம் விட்ட ராஜபக்ச கும்பல்,தென்னிலங்கை கடனில் மூழ்கும் அபாயம்

105

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு நேர்மையாக பணியாற்றி இருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்சே குடும்பம் தப்பி இருக்க முடியாது. அதே போல பிரதான எதிர்க்கட்சியாக பாராளமன்றத்தில் இருந்த தமிழரசு கட்சி இந்த விடயங்களில் பாராளமன்றத்தை சரியாக பயன்படுத்தி இருந்தால் நல்லாட்சி அரசாங்கம் ராஜபக்சே குடும்ப விவகாரத்தில் நெகிழ்வுடன் நடந்து கொண்டு இருக்க முடியாது. மொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கமும் அதன் பங்காளர்களும் தனது சொந்த அரசியல் இலாபங்களுக்காக ராஜபக்சே குடும்பத்தை தப்ப வைத்த காரணத்தினால் ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் நாடு மீண்டும் சிக்கி கொண்டு இருக்கிறது

ராஜபக்சே குடும்பம் தப்ப வைக்கப்பட்ட சில மோசடி வழக்குகள் ,

1. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட Deyata Kirula exhibition கண்காட்சிக்கு முன்னதாக முன்னெடுக்கப்பட்ட வீதிகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் மூலமான ஊழல் : 300 மில்லியன் ரூபா

2. 26 கிலோ மீட்டர் நீளமான Colombo-Katunayake Expressway திட்ட ஊழல் : 46.8 மில்லியன் (கிலோ மீட்டர் ஒன்றுக்கு 1.8 பில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டதாக அரச நிதி கணக்குகளில் காட்டப்பட்டு இருக்கிறது . இது தங்கத்தினால் குறிப்பிட்ட வீதியை நிர்மாணித்து இருந்தால் ஏற்பட கூடிய செலவை விட அதிகமானது)

3.தேர்தல் காலங்களின் போது விமானப்படைக்கு சொந்தமான வானூர்திகளை ராஜபக்சே குடும்ப அங்கத்தவர்கள் பயன்படுத்தியதன் மூலம் அரச பொது நிதிக்கு ஏற்படுத்திய நட்டம் : ரூபா 2,278,000.00

4. $1.4 பில்லியன் பெறுமதியான Colombo Port City திட்டத்தின் போது China Communications Construction Company (CCCC) என்கிற நிறுவனத்தை முதலீட்டாளர்களில் ஒருவராக அங்கீகரித்தமை தொடர்பான மோசடி

5. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுகளுக்கு நகர்த்திய மோசடி (money laundering) : ரூ. 700 மில்லியன்

6. சட்டவிரோதமாக வெளிநாடுகளில் வாங்கி குவித்து இருக்கும் சொத்துக்கள் தொடர்பான மதிப்பீடு : ரூபா 237,933,000

7. பொதுமக்களுக்கு என உருவாக்கப்பட்ட அரச பொது வீடமைப்பு திட்டத்தில் செய்த மோசடி : 70 மில்லியன்

8. திவி நெகுமே அபிவிருத்தி திணைக்களத்தில் நிதி மோசடி : ரூபா 108 மில்லியன்

9. சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் நிலம் வாங்கிய மோசடி : 208 மில்லியன்

10. மிக் விமானங்கள் கொள்வனவு ஊழல் : US$ 10 Million (மிக் விமானங்கள் கொள்வனவின் போது Bellimissa Holdings Limited என்கிற போலி நிறுவனத்திற்கு US$ 10 Million செலுத்தியதாக கணக்கு காட்டி இருந்தார்கள்)

11. தங்கள் பெற்றோர்களுக்கு நினைவில்லம் கட்ட அரச பொது நிதியை பயன்படுத்தியன் மூலம் அரசுக்கு ஏற்படுத்திய நட்டம் : 33 மில்லியன் ரூபா

12. அவன்காட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சிய மோசடி : 1400 கோடி ரூபா

13. இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் மூலமான ஊழல் : 172 மில்லியன் ரூபா

14. CSN தொலைக்காட்சி ஊழல் : 365 மில்லியன் ரூபா

இது தவிர The Nation பத்திரிகையின் இணை ஆசிரியர் Keith Noyahr அவர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதில் மகிந்த ராஜபக்சே நேரிடையாக தொடர்புபட்டு இருந்தார் என சொல்லப்படுகிறது. அதே போல கோத்தபாயா ராஜபக்சே லசந்த விக்ரமதுங்க (பத்திரிகை ஆசிரியர் ), முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியராச்சி, பிரகீத் எக்னெலிகோடா (பத்திரிகையாளர் ) ஆகியோரின் படுகொலைகளில் தொடர்புபட்டு இருந்தார். மகிந்த ராஜபக்சே அவர்களின் பிள்ளைகள் வாசிம் தாஜுதீன் என்கிற விளையாட்டு வீரர் படுகொலையில் நேரடியாக தொடர்புபட்டு இருந்தார்கள் .

இது பற்றி எல்லாம் நேர்மையாக பேசாமல் ராஜபக்சே குடும்பத்தின் மோசடிகள் பற்றி மீண்டும் மீண்டும் பேசி நல்லாட்சி அரசாங்கத்திற்கு வெள்ளையடிப்பதால் பயன் இல்லை

நல்லாட்சி அரசாங்கமும் ராஜபக்சே குடும்பத்தை தப்ப வைத்தவர்கள் என்கிற வகையில் கூட்டு களவாணிகள் தான்

https://www.facebook.com/shalini.akilesh.7