ப்ளாட்பார்மில் பசியால் உயிரிழந்த தாய்,போர்வையை எடுத்து விளையாடிய குழந்தை,எல்லையில் சீனாவுடன் பனிபோர் விளையாடும் அரசு

72

சொந்த ஊருக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம் என குஜராத்தில் இருந்து ரயில் பிடித்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு 2 வயது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் புறப்பட்டு உள்ளார்.

சொந்த ஊருக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து கொள்ளலாம் என குஜராத்தில் இருந்து ரயில் பிடித்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு 2 வயது குழந்தையுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் புறப்பட்டு உள்ளார். ரயில் திங்கள் இரவு மூசாபர்பூர் ரயில் நிலையத்தை அடையும் முன் அந்த பெண் உயிர் பிரிந்துள்ளது. பசி, வெப்பம் தாங்காமல் உயிரிழந்தஅந்த பெண்ணின் சடலம், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் போர்வையால் மூடப்பட்டு இருந்த நிலையில், தாய் இறந்தது அறியாத குழந்தை அந்த போர்வையை எடுத்து விளையாடிய காட்சி, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோன்று டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய மற்றொரு புலம் பெயர் தொழிலாளியின் 2 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது..

நாட்டு குடிமக்கள் இங்கே பசியால் இறந்து கொண்டிருக்க,எல்லையில் இந்திய அரசாங்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடம் ஊழல் செய்து வாங்கிய ஆயுதங்களை வைத்து சீனா,பாகிஸ்தானுடன் போராடி யாரை காப்பாற்ற போகிறார்கள்? டேய் சோத்த போடுங்கடா முதல்ல…