மாசிலன்

525

‘மாசிலன்’ சுஜித்ஜீ யின் அண்மையில் வெளிவந்த ஒரு குறும்படத்தின் தலைப்பு இது. கதை, வசனம், காட்சியமைப்பு, நடிப்பு, நிர்வாகம், தயாரிப்பு என்று யாதுமாகி நிற்கின்றார். பலலட்சங்கள் செலவழித்து தயாரித்த, பிரமாண்டமாக சில படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும்பல மடங்கு நிறைவையும், நினைவையும் தந்துபோகிறது இந்த பத்து நிமிடக் குறும்படம். இப்படத்தில் காண்பிக்கப்படும் பல விடயங்களைஆய்ந்து அறிந்து அலகு அலகாக விமர்சிக்கப்பிடித்திருந்தாலும், இங்கு மிகமுக்கியமாகஎனக்கு பிடித்த விடயம் இந்த குறும் படத்தின் கதையின் கருப்பொருள். இப் பத்தியில்முன்பும் ஓரிரு தடவைகள் இதுபற்றி வேறு வேறுதலைப்பின் கீழ் எழுதியிருந்தாலும், எமதுமக்களின் மத்தியில் இது இன்னும் பலமாகவிமர்ச்சிக்கப்பட, விவாதிக்கப்பட வேண்டியதொரு விடயமாகவே இன்னும், வலுப்பெற்றுவருகின்றது.

இங்கு வெளிநாடுகளில் பெண்களுக்கு இருக்கும் பொருளாதார பாதுகாப்பின் காரணமாகவும், பிரிந்த கணவர்மாரிடம் இருந்து பிள்ளைகளுக்கு வரும் வருமானம் காரணமாகவும், ஒப்பீட்டு ரீதியில் தாயகத்தை விட இங்கு, இரண்டு தடவை இருந்து யோசிக்காமல் விரைவில் பிரிந்து போகிறார்கள்.

கல்யாணம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விடயம் தானே, காலப்போக்கில் மனம் மாறி, விரும்பாவிட்டால், ஏன் போலியாக இருந்து ஊருக்காக மாரடிக்க வேண்டும் என்பது பிரிந்துபோகிறவர்களின் வாதம். முதலில் பிள்ளைகள்இல்லாத பிரிந்து செல்ல நினைக்கும் தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். யாருமே நுÖறுவிகிதம் சரியானவர்கள் அல்ல. எல்லோரிடமும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும், நீங்கள்அணுகும் விதத்தில் அந்தந்த பக்கத்தை அதிகமாக பார்க்க நேரிடும்!

இது தவிர சுற்றியிருக்கும் உறவினர்களும்,நண்பர்களும் சில திருமணங்கள் விவாகரத்தில்முடிவதற்கு காரணமாகவும், துÖண்டுதலாகவும்இருக்கின்றனர். நான் என்றால் இப்பிடி இருக்கமாட்டன், நான் என்றால் இரண்டு கன்னத்தில கொடுத்திருப்பன், இழுத்துப்போட்டு மிதித்திருப்பன், பொலீஸ்க்கு அடித்திருப்பன், உனக்குபொருத்தமே இல்லை, என்று அடித்து அடித்துஅம்மியையும் நகரவைத்து விடுவார்கள்.

அத்தோடு இல்வாழ்க்கைக்கு வரும் முதல், வேலையிருக்கிறதா? இருக்க வீடு இருக்கிறதா? வயது, படிப்பு, பணம் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்துக் கொள்கிறார்களே தவிர, நாம் வள்ளுவன் சொன்ன இல்வாழ்விற்கு தயாரா? என்று யோசிப்பதும் இல்லை, பார்ப்பதுவும் இல்லை. இந்து மதம்இல்வாழ்வை முடித்துக்கொண்டுதான் துறவறத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்கின்றது. அந்தளவிற்கு அது இல்வாழ்வை வலியுறுத்துவதோடு. உனது சுயநலத்தை மறந்து மற்றவரில் அன்பு செலுத்தும் இயல்பு தான் இல்வாழ்கைக்கு முக்கியமாக வேண்டியது என்கிறது, ஆனால் இப்போ நடக்கும் திருமணங்களில் அந்த இயல்பு தம்மிடம் இருக்கிறதா நாம் இல்வாழ்க்கைக்கு தயாரா? என்பதை தவிர மற்றைய அளவு கோல் எல்லாவற்றையும் கொண்டு பொருத்தம் பார்கின்றார்கள், முக்கியமானதை விட்டு விட்டு. அன்பு, காதல், இருந்தால் அது மன்னிக்கும், மறக்கும், விட்டுக் கொடுக்கும், துன்புறுத்தாது, நோவடிக்காது, ஈகோ பார்க்காது, பிடிவாதம் பிடிக்காது, குறை பாராட்டாது. இது இருபாலாருக்கும் பொருந்தும்.

இனி பிள்ளைகள் இருந்தால் இவர்கள் விவாகரத்து செய்யும் போது அவர்களையும் அசையும் அசையா சொத்துகள் போல, உணர்ச்சிகள் அற்ற பொருள் போல, பாகப்பிரிவினை செய்கிறார்கள். சனி, ஞாயிறு தந்தையுடன், மிகுதி ஜந்து நாளும் தாயுடன் என்றுஅவர்களுக்கும் பாகப்பிரிவினைதான். அவர்களின் சின்ன மனதுக்குள் இருக்கும் ஏக்கத்தையும், ஆசையையும் பற்றி யாருக்கென்ன கவலை. அத்தோடு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்களின் மூளையின் உதவியுடன் கண்டுபிடித்து அதையும் சேர்த்துச்சொல்லி விவாகரத்து வேண்டுகின்றார்கள்.

சிலர் ஒரு குழந்தையில்லை, இரண்டு, மூன்றுகுழந்தைகள் பிறந்த பின்னும் இந்த முடிவுக்கு வருகிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து 18 வயதுவந்த பின் அவர்களுக்கு யாருடன் இருக்கவிருப்பம் என்பதை அவர்கள் முடிவெடுக்கலாம். தீர்மானிக்கலாம். ஆனால் சில நேரம் அவர்களுக்கு இருவர் மீதும் வெறுப்பு வந்து தமது வழி தனி வழி என்று போய் விடுகிறார்கள்.இவர்கள் வயது போனபின், முன்பு கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று கவலைப்படுகிறார்கள். கண் கெட்ட பின் சூரியஉதயம் எந்த பக்கம் வந்தால் தான் என்ன?

சந்தேகம், நான் பெரிதா? நீ பெரிதா என்றபோட்டி, பணப்பிரச்சனை, குடிவரவுப்பிரச்சனை என்று பல்வேறு காரணங்களால் மனஅழுத்தங்களுக்கு உள்ளாகுகிறார்கள். ‘மாசிலன்’ குறும்படம் அழகாக இதில் ஒருபகுதியினரைத் தொட்டுச்செல்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் போவதால் பிள்ளைகளும் பார்க்கலாம், அத்தோடு அவர்களோடு மனம்திறந்து கதைப்பதற்கும் இதை ஒரு வாய்ப்பாக்கலாம். படிப்பினைத்தரும் குறும்படச் சித்திரம். இவ் அவசர உலகில், அவசரமாக பிரிந்து போகும் குடும்பத்திற்கு ஏற்றவகையில், தயாரிக்கப்பட்ட பத்தே நிமிடப்படம்!

சுகி ( ஒருபேப்பருக்காக)