மாயை உலகம் – ஷாருதி ரமேஷ்

193

இந்த சமூகம் மாயையை உருவாக்கியுள்ளது

அவர்களோடு

ஒன்றிப்போக உன்னை எதிர்பார்க்கிறார்கள்

உனது தோலின் வழியாக

ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி

அழகை உருவாக்க

விரும்புகிறார்கள்

அழகு என்பதை

பார்ப்பவர்களின்

கண்கள் சொல்லும்

ஆனால் பார்ப்பவர்களின்

கண்கள் அழகினைப் பற்றி

என்ன விவரிக்கும்

கத்திரிக்கோலின்

கருணையால் வெட்டப்படும்

முடிகள் தரையில் இதழ்களாய் குவிகின்றது

அவர்களை விடுங்கள்

சிறு சிறு துண்டுகளாய்

உடலினை வெட்டி வெட்டி

குவிப்பவர்கள் வேறெங்கும்

உண்டா

உடல் தோற்றத்தில்

நவீன வடிவமைப்பை

முகத்தில் நச்சுக்கழிவின்

பூச்சைப் பூசிப் பூசி

உங்களின் இயற்கை அழகினைத் திருடும் அவர்களை விட்டு விடுங்கள்

அடுத்த தலைமுறைக்கு

அவர்கள் உன்னிடம்

என்ன எதிர்பார்க்கிறார்கள்

அவர்களை விட்டுவிடுங்கள்

ஏனெனில் நீங்கள் இருட்டின்

திண்ணையில் நீண்டகாலமாக

இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லை

அவர்கள் உங்களின் சங்கிலியை

அகற்றும்போதும் அவர்கள்

உங்களின் சிந்தனையையும்

பேச்சினையையும் அடக்கும் போதும்

நீ யாழ்பறவை ஆகின்றாய்

உனது கருத்தின்

பிரதிபலிப்பாக நீ உணர்வதை

அவர்களிடம் உருவாக்கு

இது உண்மையில் உனதுவாழ்வின்

விதியென்று இணங்குவதா

இதுதான் உனதுவாழ்வின்

நோக்கமா

பொம்மைகள் இன்றி

பொம்மலாட்டம் காட்ட முடியாது

எனவே மீண்டும் போராடு

உனது குரலை எழுப்பு

உன் கூக்குரலை

உனக்குள் நீயே கேட்கவேண்டும்

உனது கரங்களை

உனது உதட்டினை

மீண்டும் கடிக்க

கவ்விட அவர்கள் முயற்சிக்கும் போது

என்ன செய்யவேண்டும்

என்பதை கேள்

கைகளை வலிமையாக்கு

உறுமிடு

அன்பினை உணர்ந்திடு

மீண்டும் உன்னை கறைபடுத்த

முயன்றால் அடி

நீ எதை

செய்ய விரும்புகிறாய்

உன்னை நீயே கேள்

வானத்தை

அண்ணாந்து பார்

கணக்கற்ற

விண்மீன் கூட்டத்தை

அது உன்னைப் பார்க்கும் போதும்

சிரித்தமுகத்துடன்

நிலவு உன் கனவுகளோடு

உன்னைப் பின்தொடரும் போதும்

நீ தனிமையில் நின்று என்ன

செய்யலாம் என்பதை

யோசி

குற்றஙகளின் விளைவுகளுக்கு

என்ன செய்யவேண்டும்

செய்திடு.

— ஷாருதி ரமேஷ்.❣️