மார்க்கிச லும்பன்களும் அடக்கு முறைக்கெதிராக லும்பன்களும்
(மௌலி-ஒரு பேப்பருக்காக)
இடது சாரிகள் என தம்மைக் கூறிக்கொள்பவர்கள்; அதிகரித்துள்ள இந்தக் காலத்தில், பாமரனான எனது அறிதலுக்கு எட்டிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் Bruce Franklin மற்றும் பிரசித்தி பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் Frantz Fanon இனதும் எழுத்துக்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.
இதனை எழுதவேண்டும் என்ற ஆவலை என் மனதுக்குள் புகுத்தியவர் மார்க்சியவாதி எனக் கூறிக் கொள்ளும் காதர் மாஸ்டர் தொலைக் காட்சி ஒன்றில் கொடுத்த தவறான விளக்கமாகும். அதைவிட முக்கியமானது அண.மையில் தமிழ் லும்பன்கள் சிலர் கரோ பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் விளைவித்த குழப்பம்.
முதலில் லும்பன்கள் எனப்படுவோர் காதர் அவர்கள் சொன்னது போல் தெருச் சண்டியர்கள் அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தொழிலாள வர்க்கத்தில் இருந்தும் பல்வேறு காரணங்களால் புறந்தள்ளப்பட்ட ஒரு பிரிவினராகும். அவர்களை புரட்சிகர சக்திகள் “சரிவர” கையாளத் தவறின் அவர்கள் அடக்கு முறையாளனின் ஆயுதங்களாகி விடுவர். ஏனெனில் எதிரி லும்பன்களின் பலவீனங்களை அறிந்து அவர்களை புரட்சிகர சக்திகளுக்கு எதிராக ஏவி விடுவான் . தனியாக தமக்கென வாழ்வு அமைக்க வலு இல்லாத லும்பன்களை எதிரி இலகுவில் தன் அடியாட்களாக மாற்றிவிடுவான் . எதிரியால் இலகுவில் வாங்கப்படக் கூடியவர்கள் லும்பன்கள்.
அண்மையில் தீபம் தொலைக்காட்சியில் தோன்றிய இரு “மார்க்சியவாதிககள்”, மர்க்சிசத்தை குழி தோண்டிப் புதைக்கும் இரு கருத்துக்களை முன் வைத்தார்கள் .
காதர் சொன்னார் “விடுதலைப் புலிகளில் இருந்தவர்கள் லும்பன்கள், அதாவது ஊரிலை சொல்லுவமே தெறிச் சண்டியர்கள்” போன்றவர்கள் என்றார். வில்லுப் பாட்டுக்கு ஆமா போடுபவர் போல அந்த விடயத்துக்கு சிஞ்சா போட்ட சிவலிங்கம் ” ஆயுதப் போராட்டம் சமூக விரோதிகளுக்கு தான் பலன் தரும். உண்மையான அரசியலுக்கு அது தடை” என்றார் .
இங்கு முக்கியமான மூன்று கேளவிகள் உள்ளன:
1 விடுதலைப் புலிகள் தெருச் சண்டியர்களா?
2 மார்க்ஸ் சொன்ன லும்பன்கள் தெருச் சண்டியர்களா
3 விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் சமூக விரோதிகளுக்கு தான் பயன் தருமா?
இவர்கள் பேச்சைக் கவனித்தபோது இவர்களுக்கு லும்பன் என்பதன் அர்த்தமே தெரியாதவர்கள் என்பது புலப்பட்டது. ஆயுதப் போராட்டம் சமூக விரோதிகளுக்குதான் பயன் தரும் என்பவருக்கு விடுதலை வரலாறு ஏதாவது தெரியுமா என்ற கேள்விகளுக்கு மேலாக நிகழ்ச்சியை நடாத்திய தீபம் தொலைக் காட்சியின் ஊடகவியலாளர், இவர்களை ஏன் இப்படிக் கட்டாக் காலித் தனமாக பேசவிட்டார் போன்ற கேள்விகளில் இருந்து பிறந்ததே இந்தக் கட்டுரை .
மார்க்சின் சமூக அரசியல் சூழ்நிலை என்பது மன்னர் ஆட்சி, அடிமை வியாபார கால லும்பன்களுக்கும் தொழிற்புரட்சிக்கு பிந்திய நவீன முதலாளித்துவ “ஜனநாயக” உலக லும்பன்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு என்பதை இருவரும் மறந்து புலி எதிர்ப்பு வெறியைக் கக்க தீபம் அதனை ஒளிபரப்பியது என்றே கூறவேண்டும்.
நவீன உலக லும்பன்கள் எனப்படுவோர் “வேலை இழந்த” அல்லது ” வேலைக்கு அமர்த்த முடியாத” நவீன சமூகத்தின் எந்த அங்கத்துடனும் தம்மை இணைத்துக் கொள்ள முடியாத வழி தவறிய மனிதர்கள். சமூகச்சீர்கேடுகளால் உருவாக்கப்பட்ட அவலக் குழந்தைகள் இவர்கள். அவர்களது உருவாக்கத்திற்கு சமூகம்தான் பாத்திரவாளிகள் என்பதை உணராதவர்கள் சமூக விடுதலை பற்றி பேசும் தகுதி அற்றவர்கள். அடக்கப்படும் சமூகம் கலாச்சாரம் இழந்து, கல்வி அறிவு இழந்து மற்ற கட்டமைப்புக்கள் சீர்குலைந்து இருக்கும் பொழுது அங்கு உருவாகும் மனிதனின் குறைபாடுகளுக்கு அவனைக் குறை கூறி. புறந்தள்ளி, எள்ளி நகையாடி, பரிகசித்து கொள்வது மேட்டுக்குடி மனோபாவமே தவிர வேறெதுவும் இல்லை.
சரி கொஞ்சம் சீரியசான விடயத்துக்கு வருவோம். லும்பன் என்ற ஜேர்மனிய பதத்தை புரட்சியுடன் முதலில் பாவித்த மார்க்ஸ் அந்த வார்த்தை தொடர்பாக விரிவாக ஆராயாமலேயே இறந்துவிடுகின்றார் அவர் குறிப்பிட்டவற்றில் முக்கியமான பகுதியை தமிழில் பின்வருமாறு குறிக்கலாம் “சமூகத்தில் பல்வேறு வர்க்கங்களில் இருந்து அங்கும் இங்கும் என பல இடங்களில் இருந்து சிதறுண்ட ஒரு கூட்டமே இந்த லும்பன்களாகும்”
தமது நிலங்களையும் தொழிற் திறமையையும் இழந்த விவசாயிகளை லும்பன்கள் எனக் குறிப்பிடும் மாவோவின் வார்த்தைகளைப் பாருங்கள் .
“Apart from all these other classes> there is the fairly large lumpenproletariat> made up of peasants who have lost their land and handicraftsmen who cannot get work. They lead the most precarious existence of all . . . .One of China’s difficult problems is how to handle these people> Brave fighters but apt to be destructive, they can become a revolutionary force if given proper guidance. (“Analysis of the Classes in Chinese Society”).
The Wretched of the Earth என்ற ஆக்கத்தில் பிரபல மார்க்சிச சிந்தனையாளர் எழுத்தாளர் Frantz Fanon லும்பன்கள் பற்றி குறிப்பிட்டதை Bruce Franklin மேலும் விளக்கமாக எழுதி உள்ளதை இனி பார்ப்போம்.
பனான் லும்பன்கள் போராட்டத்தில் இணைக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி லும்பன்கள் எனப்படுவோர் “உடைமைகள்” அற்ற வர்கள் என அடையாளம் காண்கிறார். அவர்களை புரட்சியில் இணைக்க மூன்று முக்கியமான காரணங்களை அவர் முன் வைக்கின்றார்.
அவர்கள் தான் போருக்கு உண்மையில் தயாரானவர்கள் . (வெள்ளைக் கோட்டுச் சூட்டுக் மார்கிச லும்பன்கள் அல்ல .என்பதைத் தான் அவர் சொல்லுகின்றார்)
கிராமிய புரட்சியாளர்கள் ஆட்சி அதிகார மையத்தை ஆட வைக்க அவர்களின் அவசியத்தை அவர் குறிப்பிடுகின்றார். மிக முக்கியமாக லும்பன்கள் புரட்சியாளர்களுடன் இணைக்கபடாவிட்டால் அவர்கள் புரட்சிக்கு எதிராக அடக்குமுறையாளன் பக்கம் இணைந்து விடுவார்கள் என்கிறார்.
வேறு வழிகளில் வாழத் தெரியாத லும்பன்கள் தான் இன்று சிறீலங்கா அரசின் கைகூலிகளாக வலம்வருவதை நாம் கண்கூடாகவே பார்க்கின்றோம். எமது அமைப்புக்கள் அனைத்தும் இதில் கவனம் செலுத்த வேண்டும் .
இந்த லும்பன்களுக்கு “தேவையான” சமூகத்தில் தங்களையும் மதிக்கின்றார்கள் என்ற மாயை தேவைப் படுகின்றது. மார்க்கிச லும்பன்கள் முதல் அனைத்து லும்பன்களும் இப்படித்தான் எதிரியின் பக்கம் செயல்படுகின்றார்கள்.
காதர் – சிவலிங்கம் போன்ற லும்பன்களின் காத்தவராயர் கூத்துக்களில் நேரத்தை வீணடிப்பதை விடுத்து . சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவளியுங்கள் http://epetitions.direct.gov.uk/petitions/14586