ம
முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நிறுவன பணியாளர்கள் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டிருந்த போது பெருமளவான மனித எலும்புகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை என்பன காணப்படுவதை அவதானித்து பளைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பளைப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கே காணப்படும் சீருடைகள் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வப்போது மீட்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளும், எலும்புக்கூடுகளும் ” எங்களை மறந்துவிடாதீர்கள். .எங்கள் கனவுகளை மறந்துவிடாதீர்கள் ” என்று ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவையும் உலுப்புவதாகவே வெளிவந்துகொண்டு இருக்கிறது.