முள்ளிப்பேரவலம்

77

குண்டு மழையில் ஆனது இதயம் துண்டு துண்டாய்
இரத்த வெள்ளத்தை முன்மொழிந்தது யுத்த களம்.

உறைந்தது உதிரம். ஆனாலும் ஓடிக்கொண்டிருந்தோம்.
இறுதிக்கட்டம் என்பதை அறியாத உயிரற்ற உயிர்களாய்.

ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லை
தெரு தெருவாய் அலைந்தோம்.
காத்திருந்தோம் இறைவா; நீ
வருவாயென வரந்தருவாயென.
அவலம் நிறைந்த ஒரு காலம் அது.

குண்டுகள் நம்மை நோக்கி பாய்ந்துகொண்டே இருந்தது.
நாம் தேசம் கிடைக்கும் என்ற நம்பிகையோடு போராடிக்கொண்டே இருந்தோம்.
வந்தது ஒரு நாள் அதுதான் முள்ளியில் நாம் காணப்போகும் இறுதி நாள் என்று நினைத்திருக்கவில்லை.

ஈழம் வேண்டும் என்ற போராட்டம்
இறுதியில் உயிர்களை காப்பதற்கான போராட்டமாக உருவெடுத்தது.

கூக்குரலின் ஓலமும் எதுவும் அறியாத பிஞ்சுக் குழந்தைகளின் கதறல்களும் இன்றும் நம் மனதைச்சுற்றி ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.

இறந்த உடல்களை அடக்கம் செய்யக்கூட முடியாத ஒரு கலிகாலம் அது.
என்றும் இந்த இழப்பை மறவாதடா
நம் மனம்..

மீண்டும் ஒரு நாள்
துளிர் விடுவோம் தமிழீழத்துக்காய்…

By: Ravivarman