சுமார் ஐம்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பாலூட்டிகளின் உயர் பிரிவைச் சார்ந்தஒரு ஆபிரிக்க இனம் தன் இரு கால்களைப் பயன்படுத்தி நமிர்ந்து நடக்கத் தொடங்கியது. இரு பாத நடையின் விளைவாக பல அனுகூலங்கள் அதற்கு ஏற்பட்டது. ஒட்டு மொத்தத்தில் இந்த இனம் இன்று உலக உயிரினங்களின் உச்ச நிலையை அடைந்ததற்கு இதன் இருபாத நடை பெரும் பங்கினை ஆற்றியது என்பதுஎல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம்.
இந்த இருபாத இனங்களில் ஒன்றின் பெயர்தான் அண்மைய செய்திகளில் பரவலாகப் பேசப்படுகிறது. அதனால்தான் அந்த ஹோமோ நலடி என்ற பெயர் தலையங்கத்தில் வந்தது. அங்கே ஹோமோ என்ற ஒரு சொல்லும் நலடி என்ற இன்னொரு சொல்லும் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். உயிரியலில் பெயரிடும் முறை இப்படித்தான் அமையும். முதலாவது சொல் அந்த இனத்தின் மரபுப் பெயராகும். இரண்டாவது சொல் அந்த இனத்தின் சிறப்புப் பெயராகும். நாம் நாளாந்தம் பயன்படுத்தும் வெங்காயம், உள்ளி, லீக்ஸ் ஆகிவற்றின் பெயர்களை ஒருமுறை அவதானிப்போம். அவற்றின் மரபுப் பெயர் அலியம் (allium). இவை மூன்றையும்விட அலியம் என்னும் மரபுப்பெயருடன் நூற்றுக்கணக்கான தாவரங்கள் உள்ளன. நாம் அவற்றை அலியம் என்னும் ஒருபெயரை மட்டும் வைத்து எப்படி அடையாளம் காண்பது. சிறப்புப் பெயர் தெரிந்தால் உடனேயே அடையாளம் காணுவோம். அலியம் செபாஎன்றால் வெண்காயம். அலியம் சற்ரைவம் என்றால் உள்ளி. அலியம் பொறம் என்றால்லீக்ஸ். இதைவிட அலியம் என்ற பெயருடன் வீட்டுத் தோட்டத்திற்கு அழகிய பூக்களை அளிக்க வல்ல தாவரங்களின் குமிழ்களை அவற்றின் சிறப்புப் பெயர் மூலமே அடையாளம் கண்டு சந்தையில் வாங்குகின்றோம்.
ஹோமோ என்ற பெயருடன் உள்ள மனித இனத்தவர் வானிலிருந்து குதித்தவர்கள் அல்லர். டார்வின் கோட்பாட்டுக்கமைய அவர்கள் அடைந்த படிநிலை வளர்ச்சிதான் இன்று உலகஉயிரினங்களின் உச்ச நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்துள்ளது. ஆனால்இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கும்போது இந்த இனத்தின் மரபுப் பெயர் வேறு. இருகால் நடையை தொடங்கிய இனத்தின் மரபுப் பெயர் ஆடிபிதெத்கஸ். அது இருகால் நடையுடையதானாலும் முற்றாக மரத்திலிருந்து இறங்கவில்லை. சிம்பன்சிக்கும் அதற்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்ற சர்ச்சைகளைத் தவிர்பதற்காக 36 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அஸ்ரலோபிதெக்கஸ் மரபுப் பெயர் கொண்ட பல சிறப்பினங்களின் பதிவையே ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்கிறார்கள். இந்த இனத்தின் லூசி என்ற பெண்ணே ஆதி அம்மாவாகத் தொடக்கத்தில் கருதப்பட்டார். இப்போ மைற்ரோ கொன்றியன் அம்மா என்னும் துல்லியமாகக் குறிக்கும் சொல் வந்துவிட்டது. அஸ்ரலோபிதெக்கஸ்ஸின் படிநிலை மாற்றம் அதன் மரபுப் பெயரை ஹோமோ என்றுமாற்றும் சூழலை உருவாக்கியது. மண்டைஓட்டின் அளவின் மாற்றத்தையே முக்கியமாக இதற்கான காரணியாகக் கொள்ளலாம்.
இன்று வாழும் ஹோமோ புத்திகூர்மை உடையது. அதனால் அதற்கு ஹோமோ சபியன்ஸ்என்று பெயரிடப் பட்டது. அந்த புத்தி கூர்மையுடைய இனம் மேலும் மேம்பாடடைந்ததால் அதன் சிறப்புப் பெயரை சற்று இறுக்கிச் சொல்லவேண்டி உள்ளது. இதனால் ஹோமோ சபியன்ஸ் சபியன்ஸ் என்றே அழைக்கப்படுகின்றனர். 50 இலட்சம் ஆண்டுகளில் மனித இனம் இரண்டுக்கு மேற்பட்ட மரபுப்பெயர்களுடன் வாழ்ந்தாலும் பல சிறப்பினங்கள் வாழ்ந்திருக்கின்றன. ஒன்று அழிந்தபின்தான் அடுத்தது தோன்றியது என்றில்லாமல் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களாகவும் வாழ்ந்துள்ளனர். ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவான பரம்பரைகளும் உள்ளதால் அழிந்தஇனங்களின் மிச்ச சொச்சங்கள் எங்களுள் இருப்பதாகவும் நம்புகிறார்கள்.
எடுத்துக்காட்டிற்கு 30 ஆயிரம் ஆண்டுகளுக்க முன்பு மறைந்த ஹோமோ நியண்டதலின் பண்புகள்உள்ளதாகக் கருதுகிறார்கள். இந்த இனங்கள்ஒன்றை ஒன்று சந்தித்க நேர்ந்தபோது என்னநடந்திருக்கும் போன்ற விந்தையான சம்பவங்கள் பற்றி எம் உள்ளம் சிந்திக்கத்தான் செய்யும். இன்று ஹோமோ சபியன்ஸ்சபியன்ஸ் என்னும் ஒரே ஒரு இனம்தான் உலகம் முழுவதும் கறுப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள்,மண்நிறம் என்றும் உயரம் குறைந்த பிக்மீஸ் உயரம்கூடிய வட ஐரோப்பியர் என்றும்வாழுகின்றார்கள். இவர்கள் புத்திகூர்மை கொண்டவர்கள் அல்லவா. ஆகையால் மற்றையஎல்லா இனங்களையும் அழித்துவிட்டு தாங்கள்மட்டுமே உலகம் முழுவதும் வியாபித்துள்ளார்கள். நிற வேறுபாட்டிற்காகவும் மொழி வேறுபாட்டிற்காகவும் ஒருவரை ஒருவர் கொல்லும் இவர்கள் அந்நிய இனங்களைக் கொன்று ஒழித்ததில் வியப்பதற்கு ஏதும் இல்லை.
முதலில் ஹோமோ என்ற மரபுப் பெயருடன்வாழ்ந்த சிறப்பினம் ஹபிலிஸ். ஆயுதங்களை உபயோகித்த இனமென்றே இதை அழைப்பார்கள். அவர்களுக்கு பின் ஜோயிகஸ் என்னும்இனம் அடையாளம் காணப்படுகிறது. அடுத்த எரக்ரஸ் என்னும் இனம்பற்றிய தகவல் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் பரவலாகவும் எம்மத்தியில் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இவ்வினம் 10 இலட்சம் ஆண்டுகள் வரை இப்புவியில் வாழ்ந்திருக்கிறது. இவர்கள் உயரத்தில் குறைந்தவர்களானாலும் நடப்பதில் இன்றைய மனிதனைவிடக் கூடுதல் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். கை கால் எலும்புகளைப் பொறுத்த மட்டில் இன்றைய மனிதனுக்கும் இவர்களுக்குமிடையில் வித்தியாசம் குறைவு. இவர்கள் கையாண்ட ஆயுதங்கள் ஹபிலிஸ் உபயோகித்த ஆயுதங்களை விடவலுவானவை. இவர்கள் உலகில் பரந்து வாழ்ந்தார்கள். முதலில் குகை வாழ்வை மேற்கொண்டதும், நெருப்பை உபயோகித்ததும் இந்த இனம்தான். சீனாவின் தலைநகரிலிருந்து 30 மைல்களுக்கு அப்பால் இவர்கள் வாழ்ந்த சவ்கோரியன் குகை இன்று யுனெஸ்கோவின் தொல் அரும்பெரும் செல்வங்களில் ஒன்றாகப்பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.
பீக்கிங் மனிதன்என்று அழைக்கப்படும் இந்த இனம் அங்கு 5 இலட்சம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.சுற்றுலாப் பயணிகளை கவரும் இவ்விடத்திற்குப் போனால் அங்கு எம்மை வரவேற்பது வாசலிலுள்ள மியூசியம் தான். சீன அரசு இந்தக்குகையை பேணிப் பாதுகாக்கிறது. இதேபோல் ஜாவா மனிதன் என்ற பெயரில் ஜாவாவிலும் இந்த எரக்ரஸ் இனம் வாழ்ந்துள்ளது. ஏரக்ஸ்சிற்கு அடுத்ததாக அன்ரெசெஸ்சர், ஹைடில்பேசென்சிஸ், அடுத்து முன்கூறிய நியண்டதலென்சிஸ் என இனங்கள் வாழ்ந்தன.
இப்பொழுது தென் ஆபிரிக்காவில் காணப்பட்ட எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு உள்ளாக்கயதன் விளைவு, இது ஒரு புதிய ஹோமோஇனம் என்பது தெரிய வந்துள்ளது. இதுகாலம்வரை மனிதர்கள் மட்டும்தான்தம் இறந்தவர்களைப் புதைக்கும் அளவுக்கு அக்கறை காட்டுபவர்கள் என்ற அபிப்பராயம் நிலவியது. இப்பொழுது இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளும் உறவினர்களால் புதைக்கப் பட்டவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இறுதி முடிவு இன்னும் இல்லை.
ஆதி அம்மா என்று அழைக்கப்படுவதும் 32 இலட்சம் ஆண்டுகள் சென்றதுமான லூசியின் வயதை ஒத்ததா அல்லது அவரின் அரைவாசி வயதுடைய (16 இலட்சம் ஆண்டுகள்) ரேக்கனாபையனின் வயதை ஒத்ததா என்பதில் இன்னும் தெளிவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் வயது நிர்ணயிக்கப் பட்டாலும் பிரச்சனை தீராது. அந்த இனத்தின் தொடக்கம் எது முடிவு எது என்று அறியும் தரவுகள் கிடைக்கும்வரை இறுதிப் பதில் இல்லை.
அநேகமாக மனித இனத்தை ஒத்த இவ்வினத்திற்கு அஸ்ரலோபிதெகஸ்ஸக்கு உள்ளது போல் சிறிய மண்டையறையும் மூளையும் எப்படி அமைந்ததென்பதில் ஆய்வாளர்கள் குழம்புகிறார்கள். ஒட்டு மொத்தத்தில் ஹோமோ என்னும் மரபுப் பெயருக்குள் வரவேண்டிதுதான் இந்தஇனம். அது பற்றிய முழுத் தகவலும் கிடைக்காத படியால் தலையங்கத்தல் போட்டதையே திரும்பவும் போடுகின்றேன். யார் இந்த ஹோமோ நலெடி ?