யாழில் பெரும் போதையில் காரை செலுத்திப் பலரைக் காவுகொள்ள முனைந்த மதுபிரியர் கைது

93

ஸ்ரான்லி வீதியால் காரை செலுத்தி வந்த மதுபிரியர், வெலிங்டன் சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நிறைபோதையிலிருந்த கார் சாரதியான மதுபிரியர் சிறிலங்கா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாட்களை தமிழரில் ஒரு சாரார் இலட்சியமாக கொண்டு இயங்கி கொண்டிருக்க,இன்னொரு சாரார் கொழும்பு சுகங்களை பற்றி கதையளக்க,இடையில் இந்த மக்களின் தேவையற்ற அலட்சியங்கள்,இவ்வாறான ஒவ்வொரு தமிழர்களும் காட்டும் தனிதனியான அலட்சியங்களில் இருந்தே ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் இலட்சியங்கள் சிதைக்கப்படுகின்றன.