யாழ் தாவடி-சுதுமலை வீதி மக்கள் பயன்பாட்டுக்கு தடை

140

யாழ்ப்பாணம் தாவடி சுதுமலை வீதியானது இன்று காலையிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் தாவடி பகுதியில் கிருமித் தொற்று அகற்றும் வேலைதிட்டமானது சுகாதாரப் பிரிவினரால்முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியூடாக தாவடி சந்தியில் இருந்து சுதுமலைக்கு செல்லும் பாதையில் குறித்த ஒரு பகுதியானது பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தோடு அப்பகுதியில் இருந்து வெளியே செல்பவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியில் ராணுவம் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் நேற்றைய தினம் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எவரும் அவ்விடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் குறித்த வீதியானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது