யாழ்.பொலிஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆளுனர்

62

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பொலிஸாரே யாழ்ப்பாணத்தில் காப்பாற்றினார்கள்.

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அம்மையார் கூறியுள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்ப டுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே,

மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

அதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.