ராஜூவ்காந்தியும் திருட்டு பூனை திமுகவும்,பால் குடி உடன்பிறப்புக்களும்

ஈழத்தமிழர்களுக்காக திமுக ஆட்சியை இழந்தது என்று போலியான ஒரு கதையை தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால், ஜெ.ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் நோக்கில் தனது ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சி நடத்திய அன்றைய பிரதமர் சந்திரசேகரை மிரட்டி ஜனநாயகத்திற்கு விரோதமாக கருணாநிதியின் ஆட்சியை கலைத்தவர் ராஜீவ் காந்தி என்பதை மறந்தும் பேசுவதில்லை.

அமைதிப்படை என்ற பெயரில் அக்கிரமம் செய்து விட்டு வரும் ராஜீவ் படையை வரவேற்க மாட்டேன் என்றவர் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. ஆனால் இன்றைய திமுகவினர் அதே ராஜீவை, அமைதிப்படையின் தவறுகளை நியாயப்படுத்தி பேசுகிறார்கள்.

பன்னாட்டு சதிக்கு பலியானவர் ராஜீவ். இன்னும் கூட ஒரு முடிவுக்கு வர முடியாத பல்வேறு முடிச்சுகளை கொண்டது அந்த வழக்கு. ஆனால், இதற்கெல்லாம் திமுக உடந்தை என்று கூறி திமுகவின் கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்த்து சொத்துளை சூறையாடினார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

1987 அக்டோபர் 15ம் திகதி ‘த வீக்’ பத்திரிகைக்கு மு.கருணாநிதி அவர்கள் அளித்த பேட்டியை கீழே தந்திருக்கிறேன்.

கே: சிறீலங்கா நிலமை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

ப: இந்தியா இப்போது மிகக் கொடூரமாகவும், இரக்கமற்ற முறையிலும் நடந்து கொள்ளுகிறது. தமிழ் மக்களைப் பாதுகப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட அமைதிப்படை இப்பொழுது தமிழர்களை வதைத்து அழிக்கிறது. இந்தியா பெரும் தவறு இழைக்கிறது. இது மாபெரும் குற்றமாகும் என்று பலர் கூறுகிறார்கள்.

கே: இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?

ப: போதுமான அனுபவமற்ற ராஜீவைத்தான் குற்றம்சாட்டுவேன். ஜயவர்த்தனா தனது நலத்துக்காக அவரைப் பயன்படுத்திவிட்டார்.

இந்த ஒப்பந்தம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பது தொடர்பாக ராஜீவ் ஏன் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டார்? ஈழம் தமிழர்களுக்குச் சொந்தமானது. அம்மக்களை அபிப்பிராய வாக்கெடுப்புக்குள் ஏன் உட்படுத்த வேண்டும்?

கே: இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தாங்கள் தரும் ஆலோசனை என்ன?

ப: இப்பொழுது உடனடியாக, நீண்டகாலத் தீர்வு பற்றி எனக்கு அக்கறையில்லை. IPKF தமிழர்களைக் கொல்வதைத் தடுக்க வேண்டும்.

பிரபாகரன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறார்.

ஆகவே அவருடன் பேசட்டும். புலிகளை IPKF முடிவுகட்டிவிட்டால் அது ஒரு பெரிய சாதனையாகாது. இந்தியத் துருப்புக்கள் தங்களுடைய வலிமையைக் காட்ட வேண்டுமானால் சீனாவிடமிருந்து எமது பிரதேசத்தை திரும்ப மீட்கட்டுமே?

கே: ஆனால் எல்.ரீ.ரீ.ஈ.யினர் ஒப்பந்தத்துக்கு ஒத்துழைப்புத் தருகிறார்களில்லையே?

ப: ஒப்பந்தத்தை மீறியவர் யார்? ஜயவர்த்தனாவா? அல்லது பிரபாகரனா? தமிழ் பிரதேசங்களில் இனிமேல் குடியேற்றம் இடம்பெறலாகாது என்கிறது ஒப்பந்தம்.

கிழக்கில் பெருந்தொகையான சிங்களக் குடியேற்றம் நடைபெறுவது தொடர்பாக ஒரு பட்டியலே என்னிடம் இருக்கிறது.

எல்.ரீ.ரீ.ஈ.யினர் கைது செய்யப்பட்டமை, ஒப்பந்தம் மீறப்பட்டதற்கு மற்றுமொரு சான்று. அவர்கள் IPKF யிடம் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது பலாலியில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் தொடர்பு கொண்டு வந்திருக்கிறார். கொழும்பு ஒப்பந்தத்தை மீறுகிறது என்று பிரபாகரன் குற்றம் சாட்டி வந்திருக்கிறார்.

எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே அவருடைய தளபதி திலீபன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

திலீபன் இறக்கும்வரை இந்திய அரசாங்கமோ சிறிலங்கா அரசாங்கமோ எதுவுமே செய்யவில்லை.

1984ஆம் ஆண்டு இந்திராகாந்தி அமையாரின் கொலையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் திட்டமிட்டு வேட்டையாடப்பட்ட சீக்கிய மக்கள் தொடர்பில் 21 ஆண்டுகள் விசாரணை நடந்தும் யாருமே தண்டிக்கப் படவில்லை. 10 விசாரணைக் கமிசன்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடந்துள்ளது. முடிவு – 0 . பரவலாக டெல்லியில் நடந்த இந்த சீக்கிய மக்கள் மீதான வன்முறையில் 5000 க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். பஞ்சாப்பில் இருந்து வந்த ஒரு ரெயிலில் 56 உயிரற்ற உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டது. டெல்லியில் ஒரு இடத்தில் மட்டும் 96 பேர் கம்பியால் அடித்தும் / கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர் . காவல்துறையும் / இராணுவமும் முற்றும் முடியலையாழுதாக இயங்காமல் இருந்தன. அவை இயங்காமைக்கு காங்கிரஸ் அதிகார வர்க்கம் காரணமாக இருந்தது. இது குறித்து கேட்ட போது சர்வ சாதாரணமாக ராஜீவ் சொன்னார் ” பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்”. எவ்வளவு பொறுப்பான பதில்!

பூட்டிக்e கிடந்த பாபர் மசூதியை பூசைக்கு திறந்து விட்டு பேரழிவைத் தொடங்கி வைத்தவரே ராஜீவ் தானே.ப

ோபால் நச்சுவாயுவால் பல ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டபோது அதற்கு காரணமான அன்டர்ஸனை விஷேட பாதுகாப்புடன் தனி விமானத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிக்க வைத்தது யார்? ராஜீவ் தானே

இந்தியாவையே உலுக்கிய போபர்ஸ் பீரங்கி வழக்கு ராஜீவ் – சோனியாவின் உறவினர்கள் என்று நீண்டதே யார் காரணம். வழக்கின் தீர்ப்பு -0.

ராஜீவின் படு முட்டாள்தனமான அரசியல் செயற்பாடுகள் தான் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும், பாலியல் வல்லுறவுகள் புரிந்தும் இந்திய இராணுவம் மிக மோசமான பெயரை உலக அரங்கில் எடுத்தது. ராஜீவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்த ஈவிரக்கமற்ற வன்முறைகளை ஒரு நாள் முழுவதும் இருந்து எழுதலாம். ஈழ இனப்படுகொலை என்று பேசுகிறவர்கள் ராஜீவ் என்று தொடங்கி சோனியாவில் முடிக்கிறார்கள்.

சராசரிக்கும் சற்று கூடுதல் அறிவு கொண்ட திமுகவினர் ராஜீவ் என்றால் யார் என்று முழுமையாக பேசுங்கள். போலித்தனமாக நீலிக்கண்ணீர் வடித்து ஈழத்தை சாடாதீர்கள்.