லண்டனிலிருந்து இலங்கைக்குச் சென்றவர் கொழும்பில் கடத்தப்பட்டார்

605

கடந்த வாரம் லண்டனிலிருந்து இலங்கைக்குச் சென்ற மயூரன் என்ற இளைஞர் கொழும்பு மருதானையில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்தபட்டுள்ளார்.

லண்டனில் கல்விகற்றுவந்த  செந்தில் நாதன் மயூரன், ஒரு பேப்பர் பத்திரிகையில் செய்தியாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

கடந்த வாரம் லண்டனிலிருந்து கொழும்புக்குச் சென்ற அவர் 1ம் திகதி மாலையில் மருதானையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் இவரது உறவினர்கள் மருதானை பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது, அவர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய பொலிசார் அவர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் அவர் தங்கியிருந்த இடத்திற்கு இதுவரை திரும்பாத நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அவரது உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.