தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில் ஒரு பேப்பர் கோபி அண்ணா, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி ஜெகன் , சத்தியசீலன் அண்ணா மற்றும் தமிழ்வாணி அக்கா சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி ஆரம்பகாலத்தில் ஈழப்போரினில் ஈடுபட்டார்கள் என்ற விளக்கங்களை சத்தியசீலன் அண்ணா விளக்கினார்.
பிரம்மி ஜெகன் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின் அனுபவங்களையும் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் பகிர்ந்துகொண்டார், தமிழ்வாணி அக்காவும் தனது துயரங்களையும் இராணுவத்தின் இனப்படுகொலையின் உச்சகட்ட போரினைப்பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.
ஒரு பேப்பர் கோபி அண்ணா அவர்கள் சர்வதேச அரசியல் மற்றும் தமிழீழ புவிசார் அரசியல் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார். அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர் Phil Miller உரையாற்றினார்.