வங்குரோத்து நிலைக்கு சிறிலங்கா, தமிழ் டயஸ்போறாவிற்கு வலை விரிக்கிறது மைத்திரி-ரணில் அரசு

110

அண்மையில் பிரித்தானியாவிற்கு வந்த சீன அதிபர் ஜி ஜின் பிங்கிற்கு இதற்கு முன்னர் வந்த எந்த ஒரு சீனத் தலைவருக்கும் கொடுக்கப்படாத அரச மரியாதை கொடுக்கப்பட்டது. பிரித்தானியாவில் சீனாவின் நேரடி முதலீட்டினை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வரவேற்பு வழங்கப்பட்டது என்பது ஒன்றும் இரகசிமானதல்ல. நரேந்திர மோடி உலகெங்கும் பறந்து திரிந்து, தமது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழமையாகக் கிடைக்கும் சிவப்பு நாடா (red tape) அல்ல சிவப்புக் கம்பளம் விரித்துள்ளோம் பரப்புரை செய்கின்றார். வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்காக நாடுகள் எல்லாம் ஆலாய்ப் பறக்கையில் இலங்கையும் வெளிநாட்டு முதலீட்டிற்காக அலைகின்றது.

இலங்கையில் முதலீடு செய்யத் தயக்கம்

வெளிநாட்டு முதலீடுகளை வேண்டிநிற்கும் நாடுகளின் தொகை அதிகமாகவும் முதலீடு செய்பவர்களின் தொகை குறைவாகவும் உள்ள நிலையில் இன்னும் உலகப் பொருளாதாரம் ஓர் உறுதியான நிலையை அடைய முடியாத நிலையிலும் முதலீட்டாளர்கள் தமது தெரிவுகளில் கவனமாகவும் நிதானமாகவும் இருக்கின்றார்கள்.

உறுதியான அரசியல் சூழ்நிலை, ஊழலற்ற ஆட்சி, பாரிய உள்ளுÖர்ச் சந்தை போன்றவை அவர்களின் விருப்பமானதாக இருக்கின்றது. இதனால் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு பலதரப்பினரும் தயக்கம் காட்டுகின்றனர்.

சீனாவின் பிடி இன்னும் தளரவில்லை

சவுத் சைனா மோர்ணிங் போஸ்ற் என்னும் சீனப் பத்திரிகையில் அண்மையில் வந்த கட்டுரைக்கு இலங்கையில் அமெரிக்கா சீனாவிலும்பார்க்க முன்னணியில் நிற்கின்றது எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய அமெரிக்கா ஜெனிவாத் தீர்மானத்தை வைத்து இலங்கைமீதான தனது அரசுறவியல் நெம்புகோலைவலுவாக்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இலங்கை மீதான செல்வாக்கு தற்காலிகமானதே என்கின்றார் ஐக்கிய நாடுகள் சபைக்கான இனங்கையின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலக. அதற்கு அவர் கொடுக்கும் முக்கியகாரணம் குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சி அமெரிக்காவிலும் பார்க்கச் சீனா நம்பகத் தன்மை மிக்க நண்பன் எனக் கருதுகின்றது. அத்துடன் இலங்கையில் சீனா செய்த உட்கட்டுமானங்கள் மீதான முதலீட்டை அமெரிக்காவால் செய்ய முடியாது. இது இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பிரச்சனையைக் கொடுக்கின்றது. அதாவது இலங்கையில் அரசியல் உறுதிப்பாடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயத்தில் மனிதவுரிமைகள் போன்ற விடயங்களில் எந்த அக்கறையுமின்றி, புவிசார் அரசியலை மையப்படுத்தி இலங்கையின் அமைவிடதினைக் கருத்திற்கொண்டு அங்கு முதலீடுகளைச் செய்வதற்கும் உட்கட்மான மேம்பாட்டுக்கு கடன் வசதிகளைச் செய்வதற்கும் சீனா இன்னமும் தயாராக இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவோ, அல்லது ஏனைய மேற்கு நாடுகளோ இலங்கையில் முதலீடு செய்வதற்கோ அல்லது கடனுதவிகளைச் செய்யவோ தயாரக இல்லை. ஆகவே நேபாளம் இப்போது இந்தியாவிடமிருந்து விலகி சீனாவை நோக்கி நகர்வதிலும் வேகமாக இலங்கை சீனாவை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளது. மறுபுறத்தில் இலங்கை சீனாவினை நோக்கிச் செல்லாமல் தடுப்பதற்கு போர்க்குற்ற விசாரணையை என்ற அஸ்திரத்தை அமெரிக்கா பயன்படுத்திவருகிறது. இந்நிலையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஒருதொகுதி இழித்தவாயர்களைத் தேடுகிறதுசிறிலங்கா அரசாங்கம். ஆனால் அதற்குஅவசியமில்லாமல் கைகொடுக்கக்காத்திருக்கிறது ஒருதரப்பு.

தமிழர் பேரவைகள்

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில்செய்த ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ய வேண்டிய நிலையில் அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஐக்கிய அமெரிக்கா இருக்கின்றது. அதன் இரண்டாவது கட்டமான பாராளமன்றத் தேர்தலும் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு தாராண்மைவாத ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அங்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். அதன் மூலம் அங்கு வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும். மக்களுக்கு இனப் பிரச்சனை பற்றிக் கதைக்க நேரமில்லை என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். அதற்கு ஒரே வழிவெளிநாடுகளில் வாழும் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்யப் பண்ண வேண்டும். அதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் டயஸ்போறா திருவிழாவை நடாத்த முனைகிறது. தாயகத்தில் கடைவிரிக்க அனுமதி பெற்றுத்தருகிறோம் என ஆசைகாட்டியே அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்குமாறு தமிழ் அமைப்புகள் கேட்கப்பட்டன. (ஜெனிவாவிற்கு வந்து தான் வெட்டிக்கிழிக்கிறதாக கதைவிடுகிற யூஎஸ்ரிபக் புஸ்பாக்கா கொழும்புக்குச் சென்றுகலர் காட்டலாம் என்றால் விடபோகிறாவோ?)

ஆகவே வெளிநாட்டுத் தமிழர் பேரவைகள், கொங்கிரசுகள் ஆகியவற்றை இலங்கை அரசு நாடியுள்ளது. இமானுவல் அடிகளாரோ இலங்கைக்கு வரும்படி மங்களவும், மைத்திரியும் அழைத்ததை வைத்துக்கொண்டு பயணச்சீட்டு பெறுவதற்கு காத்திருக்கிறார். ஏனெனில் அவர் மீதான தடை இன்னமும் நீக்கப்படவில்லை. பாதிரியார் யாழ்ப்பாணத்தில் பணிமனையொன்றைத் திறந்தால், அவரை பார்க்கப்போகிறோம் சனத்திற்கு உதவப்போகிறோம் என்று இங்குள்ள முதலாளிகள் கொழும்பில் முதலீடு செய்வதற்குச் செல்வார்கள் என எதிர்பாரக்கப்படகிறது. பிரித்தானியத் தமிழர் பேரவையும் யாழ்ப்பாணத்தில் ஒரு பணிமனை திறக்க விருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன. இன்னொரு ரில்கோ யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டாலும் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை.

தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்யப்பண்ணினால் பின்னர் அங்கு ஓர் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்க முடியாமல் செய்யலாம் என்பது இலங்கை அரசின் சதி. வெளிநாட்டில் இருந்து இலங்கையில் முதலீடு செய்தவர்கள் அங்கு ஒரு போர் மீண்டும் ஆரம்பித்தால் தமது முதலீட்டிற்கு ஆபத்தாக முடியும் என்பதால் முன்பு செய்தது போல் உரிமைப் போருக்கு நிதி வழங்க மாட்டார்கள் என இலங்கை அரசு கருதுகின்றது.

இதில் ஒரு பேரவைக்கு பல தமிழ்ச் செலவந்தர்களுடன் (தயவு செய்து கள்ளமட்டைக் காரர்கள் எனறு எடுத்துக்கொள்ள வேண்டாம்) நெருங்கிய தொடர்பு உண்டு எனக் கூறப்படுகிறது. அதைப் பயன்படுத்த இலங்கை அரசு முயல்கின்றது. பேரவைகளைச் சேர்ந்தவர்கள் சின்னக்கதிர்காமர்? சுமந்திரனுடன் நின்று புகைப்படம் எடுத்துப் படம்காட்டிபோதே அவை திசைமாறிவிட்டன என்பது பல தமிழர்களால் உணரப்பட்டது. ஏற்கனவே பேரவைகளைச் சேர்ந்தவர்கள் மங்கள சமரவீரவுடன் மட்டுமல்ல மைத்திரியுடனும் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளனர். டிசம்பரில் இன்னொரு அமைச்சருடன் கூட்டம் நடக்கவிருக்கிறது. சோனியாவின் மூஞ்சியில் கருணையக் கண்டவர்களுக்கு மைத்திரியின் மூஞ்சியில் காண்பது சிரமம் அல்ல. ஆகவே சிறிசேனாவிற்குப் பின்னல் ஒரு தமிழ் கூட்டம் போகப் போகின்றது வாலை ஆட்டிக் கொண்டு

வக்காலத்து வாங்கும் ஜீரீவி தொலைக்காட்சி

ஜீரீவி தொலைக்காட்சியில் 2015 ஒக்டோபர் மாத இறுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷங்கர்ஷர்மா ராக்கேஷ் ஷர்மா என்னும் இரு கணக்காளர்கள் வந்து கணக்கு விட்டார்கள். அவர்களில் ஒருவர் இலங்கையி இப்போது முதலீடு செய்வது மிகவும் உகந்தது என்று சாத்திரிகள் கூறுவதுபோல் புலம்பினார். பிரித்தானியாவில் முதலீட்டு ஆலோசனை வழங்கும் போது உங்கள் முதலீட்டின் பெறுமதி கூடலாம் அல்லது குறையலாம் என சொல்ல வேண்டும் என்பது கட்டாயம் என்பதையும் மறந்து இலங்கையில் முதலீடு செய்வது உகந்தது என்றார்கள்.

வடிவேலு சொல்வது போல் எல்லாம் ஒரு குரூப்பாய்த் தான் அலையுறாங்கள். இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் ஜெகன் என்பதால் மிகுதியைச்? சொல்லத் தேவையில்லை.