வங்க கடலில் சூறாவளி சிறிலங்கா,தமிழகத்துக்கு காத்திருக்கும் ஆபத்து

292

சிறிலங்கா,தமிழகத்தில் சூறாவளி,மழை அபாயம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்களில் விருத்தியடைந்துள்ள தாழ்அமுக்கம் காரணமாக ஒர சூறாவளி உருவாகும் சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.அது வடமேற்கு திசையில் நகரகூடிய சாத்தியத்தை கொண்டிருப்பதால் சிறிலங்கா, இந்தியா பிரதேசங்களில் மழையுடனான வானிலை தொடரும் என்றும்,காற்று சற்று மிதமான வேகத்தில் வீசும் என்று இந்து சமுத்திர காலநிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதாக மாறியுள்ளதால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அதிக அளவு வெப்ப நிலை நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ளல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த அம்பன் புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என கூறப்படுகிறது.

புயலின் நகர்வு காரணமாக கடலில் கடும் சீற்றம் காணப்படும். இந்த புயல் தமிழகம் மறற்ம் ஆந்திர கடல் பகுதியை நெருங்கி வருவது போல் வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 20ம் தேதி ஒடிசா மாநிலம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இந்த புயல் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் மற்றும் வெப்பம் காணப்படும். அதாவது திங்கட்கிழமை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சிறிலங்கா தென்னிந்தியா பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும். இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம்.