ஈழத்து வல்வெட்டித்துறை கடலோடிகள்
அன்னபூரணி 75வது ஆவது பவளவிழா
பத்தாம் நுாற்றாண்டின் பின் பாதியில் மூன்று சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின. எகிப்தில் ராட்டிமிட்ஸ், சீனத்தில் சாங் இந்தியாவில் சோழர்கள் மூவருமே இந்திய பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர்.
தமிழர் வரலாற்றில் பொற்காலமாக அமைந்தது புலிக்கொடியுடன் ஆட்சி செய்த இராசஇராசன், மகன் இராசேந்திர சோழன். அவர்கள் காலடியில் வட இந்தியா வீழ்ந்தது. அதனைதொடர்ந்து கடல் கடந்து கிழக்காசியாவில் பல நாடுகள் கைவசமாகியது. இராசஇராசன் நிர்வாகமும், கட்டமைப்புக் கொண்ட பெரும் கடற்படையும் மகன் இராசேந்திரனுக்கு ஒரு அடிமைத்தளமாகவும், பெரும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது. இதுவே பரந்துபட்ட தமிழ் இராச்சியத்தை அமைக்க உதவியது. இராசேந்திர சோழனும் அவன் தந்தையும் ராஷ்டிர கூடர்களை போரில் வென்று வடமேற்கு கர்னாடகா, தெற்கு மகாராஷ்ரா வரை விரிவுபடுத்தி பின்பு துங்கபத்ராவை தாண்டி சாணக்கியர்களை வீழ்த்தினார்கள். பனலாரி மனயகேடா நாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக் கண்டதும் பயந்து போய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒளிந்து கொண்டார்கள். வடக்கு ஹதராபாத்தையும் கைப்பற்றினார்கள். பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தை ஒப்படைத்து விட்டு ஓடிப் போனான். அதற்காக ஈழத்துக்கு படையெடுத்த மகுடத்தை சிங்கள மன்னன் மகிந்தனிடம் தட்டிப்பறித்து, அவனை கைது செய்து, சோழர் சிறையில் 12 ஆண்டுகள் இருந்து இறந்து போனான். இராசேந்திரனுடைய வங்கப் படையெடுப்பு அவனுடைய கடற்படை தெற்காசிய நாடுகளுக்கு படையெடுப்பதற்கான முன்னோட்டமாகவே இருந்தது. இந்திய பெரும் கடலும், வங்காள விரிகுடாவும் பிற்கால சோழர்களின் நிலப்பரப்பாக நினைக்கும் அளவு மாற்றினார்கள். கடலும், காற்றும் அவர்கள் கப்பல் கரைக்கு கட்டுப்பட்டன. சோழர்கள் கடலை தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக சென்று வர இரவும், பகலும் ரோந்துப் பணியில் இருந்து பாதுகாப்புக் கொடுத்தனர். வர்த்தகம் செழிக்க உருவாக்கப்பட்ட பின்னர் சோழர்களின் பெரும் கப்பல் படையாக உருவாகியது. சோழர்கள் கடலின் தோழர்கள் என்ற நிலையில் ஏற்பட்டது.
`நளியிரு முந்நீர் நாலாய் ஓட்டி
வளிதொழில் ஆடை உரவோன் மருக
களியியல் யானை கரிகால் வளர’
என்கிறார் வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய செண்பாதப் புலவர் வெண்ணிக்கு யத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோராகிய தமிழ் மன்னன் ஒருவன் காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில்நுட்பத்தைக் கற்று நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார். முதல் கரிகாலனின் காலம் கி.மு. 3ஆம் நுÖற்றாண்டு ஆகும். ஆகவே, 3ஆம் நுாற்றாண்டுக்கு வெகுகாலம் முன்பே காற்றின் தொழில் நுட்பம் அறிந்து நடுக்கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்கள் திறமையும் வல்லமையும் உடையவர்களாக இருந்தனர் என்பதனை இப்பாடல் எடுத்துரைக்கிறது. ஆரம்பகால தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகக் கடல் வழியாக பாரமீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே, நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்து அதன் பின்னரே அது மேற்கே எகிப்திற்கும் ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது. பராமீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்கள் வாங்க, விற்க ஒரு வணிக முறையை உரு வாக்கிக் கொண்டனர். அத்துடன் ஆபிரிக்கா நாட்டவருடனும் தொடர்புகள் கொண்டிருந்தனர். பழம் தமிழர்கள் ஆமைகளின் வழித் தடத்தை பின்பற்றி கடல் வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழி பயணம் மேற்கொண்டனர் என்று ஒருங்கிணைந்த பெரும்கடல் கலாசார, ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிர மணி என்ற ஒரிசா பாலு தெரிவித்தார்.
மேலும் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள்பயணிக்கின்றன. இதனை அவதானித்த தமிழர்கள் ஆமைகளைப் பின்பற்றி கடல்நீரோட்டத்தைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல் தென்கிழக்கு ஆசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடல் வழிப்பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9000 தீவுகள் நீரில் மூழ்கிவிட்டன. இவற்றை சோழர்கள் எப்படி கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர்கள் 2 மரங்களைப் பயன்படுத்த தமிழர்கள் 20 வரையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகள் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.
ஆமைகளே தமிழர்களின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிக்கரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடுஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்ஆமை சிற்பங்கள் உள்ளன. கிரேக்க பாண்டியநாணங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.தமிழகப் பெண்கள் மகப்பேற்றுக்காக தாய்வீடு செல்வார்கள். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கும் மட்டும் உண்டு. இனப்பெருக்கத்துக்காக ஆமைகள் தங்கள் பிறந்தபகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்தப் பண்பாடுக் கூறு உள்ளது, ஆராயத்தக்கது. பிராங்கிளையன், ஜோசப் கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும் ஆமைகளின் வழித்தடங்களும் ஒன்று தான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறை முகமாகச் செயற்பட்டுள்ளன. பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை வெட்டிக் கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஸ்கோடி வந்தடைந் துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தை தமிழன் பயன்படுத்தியுள்ளான்.
`நளியிரு முன்னிரு நாவாய் ஓட்டி’ தமிழல் நாவாய் என்ற சொல் தொன்று தொட்டு கப்பலைக் குறிப்பதாகும். ஆங்கிலத்தில் கையாளப்படும் ‘Waval’, ‘Navy’ போன்ற சொற்கள் தமிழ் மொழிலிருந்து பிறந்த வார்த்தை என்ற செய்தி நம்மை தலை நிமிர வைக்கிறது. கப்பலும், கப்பல் வணிகமும் தொன்று தொட்டு தமிழர்களின் கைவந்த கலையாக இருந்து வந்திருப்பதை சரித்திரம் நமக்கு எடுத்துரைக்கின்றது.
சங்க இலக்கியங்களில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தோணி, பங்றி, திமில் போன்ற பல வார்த்தைகள் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களை குறிப்பதை நாம் அறியமுடிகிறது. இதில் திமில், அம்பி இவையிரண்டும் மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் என இவையிரண்டும் நீண்ட கடற்பயணத்திற்கும் கடல் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமரம் என்ற துாய தமிழ் வார்த்தை `கட்டமரான்’ (Catamaran) என்ற ஆங்கில வார்த்தையாய் உருமாறிப் போனதைப் போன்று `நாவாய்’ என்ற தமிழ் வார்த்தை Navy, Naval என்று ஆகியிருக்கிறதென்பது நமக்கு நன்கு விளங்குகிறது.
`கப்பல்’ என்ற தமிழ்ச்சொல் கூட உலகெங்கிலுமே வெவ்வேறு வகையில் உருமாறி வழங்குகிறது. கப்பல் – Sip – Ship ஆதித்தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள் இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்ககால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர் சாதவான மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல் சிற்பம் சங்க இலக்கியத்தில் யவனர் பற்றிய குறிப்புகள் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் அலையில் பாண்டிய மன்னனின் துாதன், நியூசிலாந்தில் கப்பல் மணி, தமிழன் பயணித்த கரையோர நகரங்களின் பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இப்படி தமிழன் கடல் வணிகத்தின் சிறப்புக்கு சான்றுகள் நீண்டு கொண்டே போடும்.
– தொடரும்
எழுதியது வல்வை – வாசு நேரு