‘விகடன் விருது’ திருப்பி வழங்குவது தொடர்பானது இப்பதிவு. எனக்கு இதில் முற்றிலுமாக உடன்பாடில்லை. அது ஒரு நிறுவனம்; அரசாங்கமல்ல. இது சாதாரண காலமல்ல; உலகம் இதுவரை கண்டிராத ஒரு காலம். ‘வியாபார நிறுவனம்’ எதைச் செய்யுமோ அதைத்தான் அது செய்திருக்கிறது. அதை ‘வியாபார நிறுவனம்’ என உணராதது எங்களது பிழை.ஊழியர்களையிட்ட வேதனை எனக்கு நிரம்பவே உண்டு. நானும் ஓர் ஊழியன்தான். ஆனால் நாடகமாட விரும்பவில்லை. ரத்தக்கண்ணீர் வடிய யதார்த்தத்தை உணர்கிறேன். ‘விடுதலைப்புலிகள் விபச்சாரிகளை உருவாக்கியிருக்கிறார்கள்’ என்று அது எழுதியதுதான். அதன் பிறகும் சில தமிழ்த்தேசிய வாதிகள் ‘விகடன் விருது’ வாங்கியிருக்கிறார்கள். அப்போது, இப்போதுவந்த தார்மீக உணர்வு எங்கே போயிற்று? என்றாலும் அதை நான் பிழையென்று சொல்லவில்லை. ஓர் அங்கீகாரம் கிட்டுகிறது, அவ்வளவுதான். இன்னொருபுறத்தில் அது அவர்களது(விகடனது) கருத்துச்சுதந்திரம். ‘கருத்துக் சுதந்திரம் என்றால் எதுவும் எழுதலாமா?’ என்று நான் கேட்பேன். கேட்க்காதவர்களையிட்டு எனக்குக் கோபமில்லை. இப்போது இது கொரோனாக்காலம். உலகம் முழுவதும் ஆட்குறைப்பு எல்லா நிறுவனங்களிலும் நடக்கிறது. ஆனந்தவிகடனை வியாபார நிறுவனமாகக் கருதினால் இதனைப் புரிவது கடினமல்ல. அதைவிட சில ‘சக்தி’மிக்க விளம்பரப்பிரியர்கள் இருக்கிறார்கள். விளம்பரத்திற்காக எதனையும் செய்யத் தயாரானவர்கள். அவர்கள் மரணவீட்டில் பிரேதமாகவும் மணவீட்டில் மணமகனாகவும் இருக்க விரும்புபவர்கள். அங்கு ஒரு இலட்சியமும் கிடையாது. இது அப்படியானவர்களுக்குக் கிடைத்த ‘பிரைஸ்’ விடுவார்களா? அதை நாம் கவனத்தில் கொள்ளத்தேவையில்லை; கொண்டால் எங்களைப்போல முட்டாள்கள் எவருமில்லை.
எதையும் ஒன்றுக்கு இரண்டுதரம் யோசித்துச் செய்யுங்கள்.