வேல்ஸ் இலிருந்து அருஷ்
ஒருநாட்டுக்குள்இருஇனங்கள்வாழ்வதுஎன்பதுஇன்றையசூழ்நிலையில்முற்றுமுழுதாகசாத்தியமற்றதாகமாற்றம்பெற்றுவருகின்றது. கொசோவோ, மொன்ரோநீக்ரோமற்றும்தெ ன்சூடானின் விடுதலை மட்டுமல்லாது, தற்போது ஈராக்கில் தோன்றியுள்ளநிலைக்கும் அதுவேஅடிப்படைக்காரணம்.
ஈராக்மீதுஅமெரிக்காபோர்தொடுத்துதனதுபோரின்வெற்றியைஅறிவித்துபதினொரு வருடங்கள் கடந்துள்ளநிலையில் அந்தநாட்டின் நிலை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பியுள்ளது. மீண்டும் ஒரு படை நடைவடிக்கையின் மூலம் ஈராக்கில் அமைதியை ஏற்படுத்தலாமா என மேற்குலகம் சிந்திக்கின்றது. ஆனால் அதுமிகப் பெரும்மனிதப்பேரவலத்தைஏற்படுத்தும்என்பதேஉண்மை.
ஈராக்கில் இடம்பெறும் இந்தமோதல்களின் நடுவேசிறீலங்காவிவகாரம்ஒருதிருப்பத்தைச்சந்தித்துள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளையின் அயராத உழைப்பின்பயனாகவும், புலம்பெயர் தமிழ்மக்களின் முயற்சியின் விளைவாகவும் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஓரு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழுவை ஐ.நா அமைப்பதற்கான பிரதான காரணம் சிறீலங்காஅரசு அமைத்தநல்லிணக்கஆணைக்குழுவின்தோல்வியாகும். அதுமட்டுமல்லாது சிறீலங்கா அரசின் ஆணைக்குழுவின் தோல்வியை அனைத்துலகசமூகம்வெளிப்படையாகஏற்றுக்கொண்டுள்ளதுஎன்பதும்இதற்கானகாரணம். எதிர்வரும் பத்து மாதங்கள் தனது விசாரணைகளைமேற்கொள்ளும்இந்தகுழுஅதன்அறிக்கையைஐ.நாமனிதஉரிமைஆணைக்குழுவிடம்சமர்ப்பிக்கும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையானது தனது அடுத்தநகர்வைமேற்கொள்ளும்.பல்துறைசார்ந்தபன்னிரண்டு நிபுணர்களைக் கொண்ட இந்தகுழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்குநியமிக்கப்பட்ட மூன்றுநிபுணர்களும் மிகவும் தரம் வாய்ந்த அதிகாரிகள் என்பதே சிறீலங்கா அரசுக்குகலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழுவின் ஆலோசகரான பின்லாந்தின் முன்னால் அரச தலைவர் மாட்டி அறிசாரி கொசோவோ பிரச்சனையில் சிறப்புபிரதிநிதியான செயற்பட்டவர். 2008ஆம் ஆண்டு நோபல் பரிசினையும் பெற்றவர். தென்னாபிக்காவின் காலஞ்சென்றஅரசதலைவரும், விடுதலை வீரருமான நெல்சன்மண்டேலாவினால் அமைக்கப்பட்ட தஎல்டேர்ஸ்அமைப்பின் உறுப்பினரான மாட்டி கடந்த 2012ஆம் ஆண்டு தென்சூடானுக்கும் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். தேமிசில்வியா காட்ரைட் கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றவிசாரணைகளின் போது ஐ.நாவிசாரணைக்குழுவின் நீதிபதியான பணியாற்றியவர்.
1975ஆம்ஆண்டில்இருந்து1979ஆம்ஆண்டுவரையிலும்அங்குஇடம்பெற்றபோரில்1.2மில்லியன்மக்கள்; கொல்லப்பட்டிருந்தனர். பலகுடும்பங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தன. இந்த அனர்த்தம் ஒரு இனப்படுகொலையாகவே கணிக்கப்பட்டிருந்தது. அஸ்மாஜகங்கீர் பாக்கிஸ்தானின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்ஆவார்.
வழமைபோல சிறீலங்கா அரசுஇந்தகுழுவைநிராகரித்துள்ளது. சிறீலங்காசெல்வதற்கான அனுமதியையும் அது வழங்கப்பேவதில்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே, தமதுசாவுக்கானஅழைப்பை அவர்களே அனுப்பப்போவதில்லை. ஆனாலும் இந்தகுழுவின் நடவடிக்கைகளை தமது முழுவழங்களையும் பயன்படுத்தி சிறீலங்கா எதிர்க்கவும்செய்யும். அதுமட்டுமல்லாது சிறீலங்காவுக்குநேரிடையானஆதரவுகளைவழங்கிவரும், பாகிஸ்த்தான், சீனா, ரஸ்யாமற்றும் மலேசியா போன்ற நாடுகளும், மறைமுகமாக ஆதரவுகளை வழங்கிவரும்இந்தியமத்தியஅரசுஉட்படபலஆபிரிக்க, அரபு மற்றும் லத்தீன் அமெரிக்கநாடுகளும் இந்தவிசாரணைக்கான முட்டுக்கட்டைகளைஏற்படுத்தலாம்.
விசாரணைக்குழுவைப் பொறுத்தவரையில் சிறீலங்காவுக்கு சென்று தான்விசாரணைகளைமேற்கொள்ளவேண்டியஅவசியம்அவர்களுக்குஇல்லை. ஏனெனில் சிறீலங்கா அரசின்மனிதஉரிமைமீறல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான போதுமான சாட்சியங்கள் உலகம்எங்கும் பரவி உள்ளன. அதேபோல, இந்தபோர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் பலஆவணங்களும் தரம்வாய்ந்த அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாகவெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல்போர்தொலைக்காட்சிநிறுவனத்தின்ஆவணங்களைஇங்குகுறிப்பிடலாம்.
அவர்களால்வெளியிடப்பட்டபலஆவணங்கள் உலகின்தரம்வாய்ந்தமற்றும்சுயாதீனஅதிகாரிகளால்உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா அரசபடையினர் மேற்கொண்ட படுகொலைகள்தொடர்பானகாணொளிகள்உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தலைவர் மேதகுவேலுப்பிள்ளை பிரபாகரனின் இரண்டாவது புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்களையும்தடவியல்நிபுணர்போராசிரியர்திருடெரிக்பௌண்டர் (Prof. Derrick Pounder) அதுஒருதிட்டமிடப்பட்டபடுகொலைஎன்றுஉறுதிப்படுத்தியுள்ளார்.
சிறீலங்கா படையினர் மேற்கொண்டவை போர்க்குற்றங்கள்எனவும், அவைஅனைத்துலக சட்டவிதிகளை மீறும் செயல் எனவும் மனிதஉரிமை வழக்கறிஞர் பேராசிரியர் வில்லியம் சேபாஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்துலகமன்னிப்புச்சபையின்பிரதிநிதிசாம்சபாரியின்கருத்தும்சிறீலங்காவின்போர்க்குற்றங்களைஉறுதிப்படுத்துவதாகவேஅமைந்துள்ளது. ஐக்கியநாடுகள்சபையின்மனிதாபிமானபணிகளுக்கானமுன்னாள்தலைவர்ஜோன்கோல்ம்ஸ், பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச்செயலாளர் டேவிட்மில்லிபான் எல்லோரினதும் கருத்தும் ஒன்றுதான். அதாவது சிறீலங்கா அரசில்உள்ளவர்கள்பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள்என்பதுதான். அதனைஅவர்கள்வெளிப்படையாகவேதெரிவித்துள்ளனர்.
எனவேபோரின்போது சிறீலங்காஅரசுதெரிவித்ததகவல்கள்பொய்யானவை என உறுதிப்படுத்துவதுடன், அதன்மூலம்சிறீலங்கா ஒரு திட்டமிட்ட இனஅழிப்பை மேற்கொண்டுள்ளது என உறுதிப்படுத்துவது ஐ.நாவிசாரணைக்குழுவுக்குகடினமானஇலக்காகஇருக்காது.
எந்தவிததலையீடுகளும்இன்றிஐ.நாஅமைத்தகுழுதனதுபணியைசெய்யுமாகஇருந்தால்சிறீலங்காஅரசுதப்பிப்பிழைப்பதுகடினம். இங்குதலையீடுகள் என நான் தெரிவிப்பது பிராந்தியமற்றும் சிறீலங்காஅரசுநலன்சார்வல்லரசுகள்மற்றும்பிராந்தியவல்லரசுகள்ஆகும். இதற்குள்இந்தியாவும்அடங்கும். இதனை நான்மட்டும்இங்குகூறவில்லை. ஐக்கியநாடுகள்சபையின்மனிதாபிமான பணிகளுக்கான முன்னாள் தலைவர்ஜோன்கோல்ம்ஸ்கூட அதனைத் தான்அன்றுகூறியிருந்தார். அதாவது ‘சிறீலங்காவில் இடம்பெற்றபோரைநிறுத்தபலதரப்பினர்முயன்றனர், ஆனால்தமிழ் மக்களைஅதிகமாகக்கொண்ட இந்தியாஅந்தபோருக்குஆதரவு அளித்ததுஎன்னை ஆச்சரியமடையவைத்தது’ என அவர் தெரிவித்த கருத்தை கேட்டதில் இருந்துஎந்த தமிழனுக்கு தான்இந்தியன் என்றுசொல்லஅருவருப்பாகவேஇருந்திருக்கும்.
எனவேஎதிர்வரும்பத்துமாதங்களில்தமிழ்மக்களும், அமைப்புக்களும்ஆற்றவேண்டியபணிகள்நிறையவேஉள்ளன. இந்த விசாரணைக்குழுவுக்கு ஆதரவாகமுடிந்தஅளவுஅதிகமானநாடுகளைதிருப்பவேண்டும். உலகெங்கும் பரந்துகிடக்கும் சாட்சியங்களை ஒருங்கிணைத்து விசாரணைக்குழுவின் பணிகளை இலகுவானதாகவும், உறுதியானதாகவும்மாற்றவேண்டும். இதன்ஊடாகசிறீலங்வில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை ஐக்கியநாடுகள் சபையின் ஊடாகஅறிவிக்கவேண்டும்.
அதுதான்புதியதேசத்திற்கானபாதையைதிறக்கும். இதுமிகவும் கடினமான பணிஏனெனில் ஒன்று இதற்குஎதிராக சிறீலங்காஅரசுதனது முழுவளங்களையும் பயன்படுத்தும். இரண்டாவதுதமிழ்த்தேசியம், தமிழ் மக்களின் இன்னல்கள் என்றுகூவிக் கொண்டு மறைமுகமாக சிறீலங்காவுக்கு சார்பாக பணியாற்றும் அமைப்புக்களையும் , ஊடகங்களையும், நபர்களையும்முறியடிக்கவேண்டும்.முள்ளிவாய்க்காலில்தமிழீழவிடுதலைக்கானபோர்முடியவில்லை, ஒருசமர்தான் அங்குநிறைவடைந்திருந்தது. விடுதலைப்போரின்இன்னொருசமரைஎதிர்கொள்ளதமிழ்மக்கள்தயாராகவேண்டும்.
நன்றி: ஈழம் ஈ நியூஸ்