#விடுதலைப்புலிகள் மீது பகைமை உணர்வுடன் பயணிப்போர் கூடாரமாக உள்ளது மாறுகிறது தமிழ்தேசிய வீடு…
#சம்பந்தன் தொடக்கப் புள்ளியை யுத்தம் முடிந்ததும் ஆரம்பித்து வைத்தார் அன்று பாராளுமன்றத்தில்.அவருக்கு வயது போக அவரின் விசுவாசிகள் கையில் எடுக்கிறார்கள் காலம் கடந்தும். தலைமையில் ஆரம்பித்த பகைமை உணர்வை இன்று சுமத்திரன் சித்தார்த்தன் இன்னும் அடிமட்ட தொண்டன் வரை கொண்டு செல்கிறார்கள்….
#கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை விமர்சித்து அரசுடன் காலத்தை ஓட்டி வந்த சம்பந்தன் அவர்களுக்கு தலைவர் பதவி கொடுத்து அரசியல் பிச்சை போட்டார்கள் விடுதலைப் புலிகள்.தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் மூலம் வந்து தமிழ் தேசியத்தை மழுங்கடித்து தென்னிலங்கை மக்கள் மத்தியில் புகழ் தேடுகிறார் சுமந்திரன்.சித்தார்த்தனின் இன்றைய மனநிலையை அன்று சரியாக கணித்து மனநிலை அறிந்ததுதான் அன்று விடுதலைப் புலிகள் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கவில்லை..
(#எனக்கென்னவோ உள்மனசு சொல்கிறது இவர்களும் இவர்கள் சார்ந்த உறவுகளுக்கும் விடுதலைப்புலிகளின் தொட்ட குறை விட்ட குறையாக தொடர்கிறது போல் வன்மத்தின் காரணம்????????)
#இதுவரைகாலமும் காத்து இருந்திருக்கிறார்கள்.வீடு கட்டியவனை வீட்டுக்குள் இருந்து விமர்சிப்பதற்கு. உங்களுக்கு விமர்சிப்பதற்கு தகுதி இருக்கிறது என்று எண்ணினாள்..
வீட்டுக்குள் உடுத்திய உடையை களைதெரிந்தது வெளியே வந்து உங்களின் சொந்த கோமணத்துடன் விமர்சியுங்கள் அப்பொழுது நீங்கள் விமர்சிப்பதற்கு தகுதியுடையவர்கள்…
#மக்களே இதுதான் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சியாக இருக்கிறது அன்றாடம்.இத்தனை வயது கடந்தும் இன்னும் பகைமை உணர்வுடன் பயணிக்கும் இவர்கள்தான் மக்களின் பிரதிநிதிகள்.மக்களின் தேவை எத்தனை இருக்கின்றது அதற்கான கால நேரம் இல்லை இவர்களின் அரசியலில்.ஆனால் காலத்திற்கேற்ப கருத்துக்களைக் கூறி மக்களை தங்கள் பக்கம் திருப்புகிறார்கள்…
#இது ஒரு தந்திரோபாயம் அரசியலில்.ஒரு தேவை இருக்கும் பொழுது அந்தத் தேவையை மறைப்பதற்கு அல்லது மழுங்க அடிப்பு செய்வதற்கு கையாளும் வழிமுறையைத் தான் இந்த விமர்சன கருத்து.தீக்குச்சியை கொளுத்தி விட்டு தீச்சுவாலையின் பிரகாசத்தைக் கண்டு களிக்கிறார்கள்.இதுதான் இன்று அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் மக்களை தாக்குவதற்கு…
#ஒரு பழமொழி கூறுவார்கள் ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை.அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று.ஆனால் நான் பழமொழியை நம்பவில்லை மக்களை நம்புகிறேன்..
நீங்கள் காத்திருந்து வன்மத்தை உதிர்ந்தது போல் மக்களும் காத்திருக்கிறார்கள் களை எடுப்பதற்கு உங்கள் அனைவரையும்…
எனது பதிவு சரி என்று பட்டால் பகிர்ந்து கொள்ளுங்கள்.மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்…
அன்புடன்
அரசியல் சாணக்கியன்.
https://www.facebook.com/manikam.sinnathambi