வேகநடைப்போட்டிகள் வெற்றி யாரிற்கு??

442

வேகநடைப்போட்டிகள் வெற்றி யாரிற்கு??
சாத்திரி-ஒரு பேப்பர்

ஒரு பேப்பர் பத்திரிகையின் ஒரு பதிப்பில் நா.க.தமிழீழ அரசை தட்டிக்கொடுத்தால் உடனேயே அடுத்த பதிப்பில் அதனை குட்டிக்கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம். புலிகளின் அனைத்துலகச்செயலகம் ஜ.நாவை நோக்கிய பேரணி என்று ஒன்றினை பங்குனி 5 ம் திகதி ஒழுங்கு செய்திருந்ததோடு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற பெயரில் ஒரு துண்டு பிரசுரமும் வெளியிட்டிருந்தனர். பிரான்சில் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யார் அதன் சார்பாக யார் அறிக்கை வெளியிடும் உரிமையை கொண்டிருப்பவர் என்பதில் பல இழுபறி குழறுபடி நடந்து கொண்டிருந்தாலும். யார் அறிக்கை விட்டாலும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என்று ஒரு வசனத்தை பிரசுரத்தின் அடியில் காணலாம். இவர்களின் ஏற்பாடு இப்படி நடந்து கொண்டிருக்கும் பொழுதுததான் திடீரென நா.க.தமிழீழ அரசு ஜ. நா. நோக்கிய நடைப்பயணம் என்று ஒன்றினை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்துலக செயலகத்தின் நிகழ்விற்கு முன்னராகவே தங்கள் நிகழ்வினை ஒழுங்கு செய்து தை மாதம் 28 ம் திகதி நடக்கவும் தொடங்கிவிட்டிருந்தார்கள். அனைத்துல செயலக்கத்தினை விட்டு விடுவோம் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் திருந்தாதவர்கள் இனியும் திருந்தப் பேவதில்லை. ஆனால் நா.க.த.அரசு போட்டிக்கு நடைப்பயணத்தை அறிவித்து அதன்படி நடக்கவும் தொங்கும் பொழுது இந்த பயணத்தின் நோக்கமாக அவர்கள் வைத்திருக்கும்கோரிக்கைகள்

  1. ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.
  2. சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை, சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.
  3. ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.

என்கிற மூன்று கோரிக்கைகள் ஆகும். கோரிக்கைகள் என்னவோ நல்லதுதான். ஆனால் இந்தக் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஜ.நா சபை வாசல் காவற்றகாரனிடம் எம்மவர் கொடுக்கின்ற ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தியொன்பதாவது அறிக்கையே இதுவும். இதற்கு முன்னர் கொடுத்த அறிக்கைகள் எல்லாம் எங்கு போய் சேர்ந்ததோ அங்கேயே இந்த அறிக்கையும் போகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஜ.நா சபை வளாகத்தில் அதன் வாசல் காவற்றகாரனிடம் கொடுக்கப் போகும் அறிக்கைகக்காக ஏன் இவ்வளு தூரம் நடக்கவேண்டும். நேரடியாக அங்கேயே போய் அந்த மனுவை கொடுக்கலாமே. இப்படி இவ்வளவு தூரம் ஏன் நக்கவேண்டும் என நான் நா.க.த.அரசின் பிரதிநிதி ஒருவரை கேட்டபொழுது அவர் சொன்ன பதில் என்ன வென்றால் தொடர்ந்து இலங்கையரிற்கு எதிராக போடுவதற்கு எம் மக்களிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் விழிப்ர்புணர்வை ஏற்படுத்ததானாம் நடக்கிறார்கள்.

அவரிற்கு நான் சொன்னபதில் முப்பது வருட ஆயுதப் போராட்டம், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள் அழிவுகள் இறுதியில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் மானிடப் படுகொலைகள் இத்தனைக்கும் பின்னர் எம்மவர்க்கு ஏன் போராட வேண்டும் என்று நாங்களே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால் அப்படியொரு போராட்டமே தோவையில்லை.அடுத்தது வெளிநாட்டவர்களிற்கு நாங்கள் நடப்பதாலோ துண்டு பிரசுரம் கொடுப்பதாலோ அவர்களிற்கு விளிப்புணர்வு வந்து எமக்காக போராடப் போவதில்லை அவர்களால் ஒன்றில் எமக்காக பரிதாபப்பட முடியும் அல்லது நடந்து போகிறவர்களை விடுப்பு பார்க்க முடியும் இவைதான் சாதாரண வெளிநாட்டவர்களால் செய்யக்கூடியது. ஏனெனில் வெளி நாடுகளில் அத்தனை கவனயீர்ப்புக்களையும் நாம் செய்தாயிற்று.

ஆகவே இனி வரும் காலங்களில் இப்படி கவனயீர்ப்பு செய்யிறது. ஜ.நா சபை வாசல் காவற்காரனிடம் மனு குடுக்கிறதெல்லாம் வேண்டாத வேலை இவைகளை விட்டு விட்டு ஜரோப்பிய நாடுகளில் எமது அரசியல் பலத்தை கட்டியெழுப்பவேண்டும். அரசியல் பிரமுககர்களுடன் முடிந்தளவு எமது தொர்புகளை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் மூலமாக உலக அரசியல் அரங்கில் எமது பிரச்சனைகள் பேசப்படவேண்டும் இவைதான் எதிர் காலத்தில் செய்யப்படவேண்டியது. அதை விட்டுவிட்டு திரும்பவும் குடுவைக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக அண்மையில் சிரிய விவகாரத்தின பின்னர் ஜரோப்பாவின் பலமான நாடுகளில் ஒன்றான பிரான்சின் அதிபர் நிக்கோலா சார்கோசியே ஜ.நா. சபை ஒன்றிற்கும் உதவாத ஒரு அமைப்பு அதை வைத்து ஒன்றுமே செய்யமுடியாது அதனை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு உலகநாடுகள் புதிய ஒரு ஒழுங்கில் வரவேண்டும் என்று கூறியிருக்கின்றார். பிரான்சின் அதிபரிற்கே ஜ.நா சபையிலும். அதன் தலைவர் பான்கி மூன் மீது இவ்வளவு நம்பிக்கை வந்தபின்னர். நாமெல்லாம் எம் மாத்திரம். எனவே இந்த நடைப்பயணம் நடப்பவர்களை அவர்களின் தியாகத்தினை கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல ஆனால் உணர்வு மிக்க இவர்களை போன்றவர்களை நா.க.த.அரசு தவறான வழியில் நடத்தி தமக்கு விளம்பரம் தேடுகின்றதோ எனவே எண்ணத் தோன்றுகின்றது.

அடுத்ததாக அண்மையில் இன்னொரு செய்தி லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் உத்தியோக பூர்வமாக சந்தித்து இரண்டு மணித்தியாலங்கள: உரையாடினார்கள் என்கிற செய்தி.அந்த செய்தி தவறானது என்பதை அறிந்த ஒரு பேப்பர் நா.க.அ. தகவல் பிரிவினருடன் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தாங்கள் உத்தியோக பூர்வமாக சந்திக்கவில்லையென்றும், அந்த நிகழ்வில் அனுமதி பெற்று கலந்து கொண்டிருந்ததாகவும். நிகழ்வின் இறுதியில் இரண்டு நிமிடங்கள் ஜோன் பெயிர்ட் டுடன் உரையாடியதாகவும் பதில் தந்திருந்தனர். அனுமதி பெற்று ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு இரண்டு நிமிடங்கள் மட்டுமே உரைலயாடிவிட்டு செய்திகளில் மட்டும் உத்தியோப பூர்வ சந்திப்பு இரண்டு மணித்தியாலங்கள் நடந்தது என ஏன் செய்தி வெளியானது என மீண்டும் கேட்டதற்கு அவர்களின் பதிலானது இரண்டு மணித்தியாம் எண்டால் என்ன இரண்டு நிமிடம் எண்டாலென்ன எல்லாம் ஒண்டுதான் என்பதாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு தங்கள் நாடு, தங்கள் வாழ்வு, தங்கள் வளம் எல்லாமே இவர்களால் வழிநடாத்தப்படும் என ஒரு இனமே எதிர்பார்த்துக்கொண்டிரக்கும் பொழுது இவர்களது இப்படியான குழந்தைத்தனமான செயல்களை பார்த்து என்ன செய்யலாம். ??

இது எமது கேள்வி பதில் மக்களே உங்களிடம்….