தொற்றாளர்களின் எண்ணிக்கை 3ல் இரண்டு வரை குறைவடைந்திருப்பதால் லண்டன் கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்துள்ளது.அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தலைநகரை 2ம் நிலையில் உள்ளடக்கியுள்ளதுடன் இங்கு டிசம்பர் 2ம் திகதி முதல் மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களை திறக்க முடியும்.
பல பகுதிகள் முடக்கம் அறிவிப்பதற்கு முன்னர் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.இந்த நிலையில் சமூக இடைவெளி மற்றும் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு மக்கள் குளிர்காலத்தில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கேட்டுக்கொண்டுள்ளார்.தேசிய முடக்கத்தை தவிர்த்து பிராந்திய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினால் லண்டன் 2ம் நிலையை அடையும் என அமைச்சரவை மற்றும் பிரதமருடனான காணொளி சந்திப்பின் போது சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக் குறிப்பிட்டுள்ளார்.இதுவரை சிறப்பாக செயற்பட்ட லண்டன் மக்களுக்கு தனது மரியாதையை செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இது தொடர்ச்சியான ஒரு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாக சுகாதர அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.நான்கு வார முடக்கத்தினால் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் லண்டனில் 6 பில்லியன் பவுண்ஸ் நட்டம் ஏற்படும் என நகர பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிராந்திய ரீதியிலான கணக்கெடுப்பில் நவம்பர் 18ம் திகதி வரை லண்டனே குறைந்த தொற்றாளர்கள் பதிவாகும் பகுதியாக காணப்படுகின்றது.இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் குறிப்பிடடுள்ளது.