ஆப்பிழுத்த குரங்கு “வால்” தப்புமா!

280

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.இவர் பொலனறுவையில் 111 137 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.கடந்த அரசாங்கத்தில் மைத்திரி செய்த துரோகங்களும் பின்னர்,ரணிலால் ஏமாற்றப்பட்டு,திரும்பவும் மஹிந்தவை பிரதமராக்கி அழகு பாத்திருந்தமையும் குறிப்பிடதக்கது.எனினும் ராஜபக்ச குடும்பம்,ஆட்சிக்கு வந்ததும் அதன் ஏதேச்சதிகார போக்கில் செயல்பட தொடங்கியுள்ளது.மைத்திரி ஆட்சிக்கு வந்தபோது கோட்டபாய ராஜபக்சவை கைது செய்ய முயன்றிருந்ததும்,அது ரணிலினால் முறியடிக்கப்பட்டதும் அறிந்ததே,எனினும் விசாரணை என்ற பெயரில்,கோட்டா நீண்ட நாட்களாக அங்குமிங்கும் அலைகழிக்கப்பட்டு அவமானப்படுத்தபட்டிருந்தார்.இன்று அது தொடர்பான பலர் தலைமறைவாகியுள்ளதுடன் நாட்டைவிட்டும் சென்றுள்ளனர்.

மேலும் பல அரசாங்கங்களின் கீழ், அமைச்சுப் பதவிகளை வகித்த அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த விஜயதாச ராஜபக்‌ஷ, எஸ்.பி. திசாநாயக்க, சந்திம வீரகொடி ஆகியோருக்கும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.