2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு

178

2002 யுத்த நிறுத்தம்,சிங்கள சிறிலங்காஅரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முதலாக நடந்தப்பட்ட மிகப்பெரிய ஊடகவியாளலர் சந்திப்பு,உலகம் முழுதும் வந்திருந்த மீடியாக்களின் கேள்விகளுக்கு தலைவர் பிரபாகரன்,தேசத்தின் குரல் அன்ரன் பாலா அண்ணையுடன் இருந்து கொடுத்த பேட்டி

தமிழீழ தீர்வை தாண்டி வேறு எந்த தீர்வுக்கும் ஒத்து கொள்வீர்கள?

பதில் : தமிழீழ கோரிக்கை மக்களால் வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.அந்த கோரிக்கைகாக நாம் ஆயுத தாங்கி போராடுகிறோம்

சமாதான முயற்சிகளில் எவ்வளவு தூரம் நீங்கள் அர்பணிப்பாக இருக்கிறீர்கள்? ஏன்?

பதில் : நாங்கள் உண்மையான சமாதானத்தை விரும்புவதனால்தா ஒரு தலைபட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டிருக்கின்றோம்.

ஏற்கனவே நடைபெற்ற சமாதான முயற்சிகளை தவிர இந்த முயற்சியை நாம் வித்தியாசமாக பாக்கிறேன்,இலங்கை பிரதமரும் சில உறுதியான முடிவுகளை எடுப்பதால்,இந்த சமாதான பேச்சுவார்த்தை சரியாக நகரும் என்று நம்புகிறேன்.

எமது முன்னைய தமிழ் தலைவர்கள் அகிம்சை வழியில்தான் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.அதன்பின்னர் எம் மக்கள் மீது சிங்கள இனவாத ஆயுத வன்முறை திணிக்கப்பட்டத்தை தொடர்ந்தே நாம் ஆயுதங்கள் எடுக்க தீர்மானித்தோம்.இருந்தும் நாம் சமாதான முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்கள் அமையும் போதெல்லாம் நாம் அதற்காக பின்னிற்பதில்லை.

இலங்கையும் அமெரிக்காவும் ஒன்று சேரும் போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்குதா?

பாலா அண்ணை பதில் : சிறிலங்கா எந்த உலக வல்லரசு நாட்டோடு வந்தாலும் சரி,நாம் வெளியில் இருந்து வரும் எந்த சக்திகளுக்கும் அடிப்பணிய போவதில்லை.நாம் எமது மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தொடர்ந்து போராடுவதே எமது நோக்கம்

தமிழர் தாயகம்,தமிழர் தேசியம்,சுயநிர்ணய உரிமைகள் அடங்கிய தீர்வு முன்வைக்கப்பட்டு எமது மக்கள் அதை ஏற்றுகொள்ளமிடத்து
நாம் ஆயுத போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக பரிசீலிப்போம்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாம் தொடர்ந்து பல்வேறு வழிகளில் இலங்கை அரசுடன் பேசி வருகிறோம்,தமிழ் கட்சிகளையும் அது தொடர்பாக பேச சொல்லியிருக்கிறோம்.

உலகம் முழுவதுமான எமது அமைப்பிற்கான தடைக்கு காரணம்,இலங்கை திட்டமிட்ட அரசின் பொய் பிரச்சாரம்..அது தொடர்பில் உலகத்து நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளோம்.

ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான முதல் கேள்விக்கே இது ஒரு நடந்து முடிந்த துன்பியல் சம்பவம் என்று குறிப்பிட்டிருந்தாலும்,பின்னரும் அதே கேள்வி பல உலக,இந்திய ஊடகவியாலளர்களால் கேக்கபட்டே வந்தது. பிராந்திய இந்திய அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்றும்,பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியாவை நாம் இவற்றில் பங்கேற்க அழைக்கிறோம்.ஆனாலும் இந்தியா இதனை இன்னும் ஏற்றுகொள்ளவில்லை என்றும்,இந்தியாவை தாண்டி நோர்வே பேச்சுவார்த்தையில் தொடர்வதை பற்றியும்,நோர்வே ஏற்கனவே பாலஸ்தீன பிரச்சினையில் பங்குகொண்ட விதம்,பாலஸ்தீனத்தின் இன்றைய சிக்கல் நிலைகள் குறித்து தெரிந்திருந்தாலும்,அதனை தாண்டிய எமது போராட்டம் வித்தியாசமான ஒன்று என்ற கோணத்தில் பதிலளித்திருந்தார் பாலா அண்ணா

சிறுவர்களை போரில் ஈடுபடுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு?
இப்போது அப்படி யாரையும் நாம் வைத்திருக்கவில்லை,அவர்களின் கல்வி நல்வாழ்விற்காக பாடுபடுகிறோம் என்று தலைவர் பதிலளிக்க,சிறுவர்களை வைத்து கொண்டு இவ்ளவு பெரிய போர்களை வெல்லமுடியாது என்று பாலா அண்ணை பதிலளித்தார்.

எங்களின் தலைமறைவு வாழ்க்கை,கஷ்டங்களுக்காக போராட்டத்தை கைவிடுபவர்கள் அல்ல,நாம் எமது உரிமைகளுக்காக உயிரை கொடுத்து போராடுபவர்கள்.

உலக ஒழுங்கு சார்பாகவும் சிறிலங்கா அரசுடன் எமது மக்களுக்காக பேசும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் பேசுகிறோம்,இதனை தாண்டி எதுவும் இப்போது இல்லை,மற்றபடி நாம் நாமதாக இருக்கிறோம்.

எப்பவும் போல் இந்த சிங்கள அரசும் இறுதியில் ஏமாத்தினால்,உங்களின் பதிலடி என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு?

நாங்கள் இந்த அரசில் நம்பிக்கை வைத்துள்ளோம்,என்றும் அந்த நம்பிக்கையில் நாம் முன் செல்ல விரும்புகிறோம் என்று பாலாஅண்ணை பதிலளித்தார்.

ரணில் அரசை தீர்வு விடயத்தில் நம்புகிறீர்களா? ரணில் மட்டுபடுத்தப்பட்ட அதிகாரங்களோடு உள்ளார்? சந்திரிக்கா அரசு இதனை குழப்ப நடவடிக்கை எடுத்தால் என்னவாகும்?

இடைக்கால தீர்வை முன்வைத்துள்ளோம்,அதில் முன்னேறி ஒரு கட்டத்துக்கு மக்களை கொண்டுவந்த பின்னர்,அடுத்தகட்டம் பற்றி யோசிப்போம்,நாம் சந்திரிக்கா தொடர்பில் அப்படி எதுவும் நினைக்கவில்லை,அப்படி எதாச்சு அவர் நடவடிக்கை எடுத்தால்,அது தொடர்பாக பதிலளிக்க வேண்டியது ரணிலின் பொறுப்பு

மற்றைய தமிழ் கட்சிகளை அரசியல் செய்ய அனுமதிப்பீர்களா? இல்லை சர்வதிகாரத்துடன் நடப்பீர்களா?

தொழிலாளர் நலம் சம்பந்தபட்ட கட்சி எதிர்காலத்தில் உங்கள் நாட்டில் தோற்றம் பெற்றால்,நீங்கள் அனுமதிப்பீர்களா?

தலைவர் – அப்படியான ஒன்று இப்போதில்லை,இனியும் எம் மக்களுக்கு தேவைப்படமாட்டாது.

முஸ்லீம் மக்களும் தமிழீழ அங்கத்தவர்கள் என்று புலிகள் சொல்லுகிறீர்கள்,ஆனால் முஸ்லீம் மக்கள் ஈழ போராட்டத்துக்கு செய்த பங்களிப்பு குறித்து கூற முடியுமா?

பதில் அளிக்க முடியாது – பாலாஅண்ணை

பிரதமர் ரணில் உங்களின் பிரதமரா?

பதில் – சத்தமாக சிரித்த தலைவர் பிரபாகரன்
இல்லை,அவர் சிறிலங்கா சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களின் தலைவர்.

தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை எப்போது தீர்ப்பீர்கள்?
மூன்று மாதங்களில் தீர்ப்போம் – பாலாஅண்ணை
வெள்ளையின ஊடகவியலாளர் – மூன்று மாதம் இங்கு நிலத்தில் படுத்திருந்தாச்சு அதை பாத்துவிட்டு போகிறேன்(சிரிப்புடன்)

நாங்கள் எமது மக்களின் விடுதலை போராட்டத்தில் ஈடுபடும் போராளி,எம்மை பயங்கரவாதிகளாக பார்க்கும் நாடுகள், பயங்கரவாதிகளுக்கும் விடுதலை போராட்டத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அந்தந்த நாடுகளே விளங்கி கொண்டு இக்குழப்பங்களை தீர்க்கவேண்டும்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முறிவடைந்தால்,அமெரிக்கா தலையிடும் என்று நினைகிறார்களா?

இல்லை,நாம் அப்படி நினைக்கவில்லை – தலைவர் பதில்

உங்களுக்கு மிகவும் பிடித்த சமர் எது ? ஏன் அது பிடித்தது?

பதில் : ஜெயசிக்குறு , எதிரிகள் பாரிய போர் ஆயத்தங்களுடன் தொடுத்த சமர்

உங்களுக்கு பிடித்த சிங்கள இராணுவ தளபதி யார்?

பதில் : அப்படி யாரும் எங்களுக்கு பிடிக்கும் அளவுக்கு சவாலாக இருக்கவில்லை.

நீங்கள் நினைவில் வைத்திருக்கும் சிங்கள இராணுவ தளபதி யார்?

பதில் : அப்படியும் யாருமில்லை

( ரத்வத்த என்று சொல்லவா என தலைவர் காதருகே நக்கலாக கேக்கிறார் பாலாஅண்ணை)
பக்கத்தில் கருணாவை பார்த்து உனக்கு யாரையும் பிடிச்சிருந்தா சொல்லு வென நகைக்கிறார்.

பேச்சுவார்த்தை காலத்தை பயன்படுத்தி ஆயுதங்களை குவிக்க முற்படுவீர்களா?

பதில் ; இல்லை,போர் நடந்தால்தா எமக்கு அதிகமான ஆயுதங்கள் எதிரிகள் மூலம் கிடைக்கும்,பேச்சுவார்த்தை காரணமாக அந்த சந்தர்ப்ஙகளை நாம் இழந்திருக்கிறோம்(சிரிப்புடன்)

ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக இந்தியா உங்களை கைது செய்ய இன்டர்போலிடம் கோரியுள்ளது? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் பாலா அண்ணாவிக்கு ; நகைப்புடன்.. நடக்கிற விசயங்கள பற்றி கதைக்க சொல்லுங்க

பேட்டியின் முழுமையான வீடியோவை மேலே இணைத்துள்ளோம்.தமிழர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் நாம் விட்ட இடத்தில் இருந்து தொடர்வதற்கும் மக்களின் விடிவு தொடர்பான ஒரு நிரந்தர எட்டகூடிய இலக்கை அடைவதற்கான போராட்ட களத்திற்கான வாசல் இங்கிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.