மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சங்குவேலி பகுதியில் மேற்கொண்ட திடீர் முற்றுகை நடவடிக்கையின்போது, வீட்டில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான பொருட்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 85 அரச மதுபான போத்தல்  இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது