கனடா,அமெரிக்காவில் உச்சத்தை தொடும் வேலைவாய்ப்பின்மை

கனடா வேலைவாய்ப்பின்மை 13 சதவீதம் ஆனது அமெரிக்கா 14.7 சதவீதத்தைத் தொட்டது

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்காரணமாக நாடுகள் முடங்கிப்போக வேலைவாய்பின்மை வரலாறாக உலகம் தழுவி அதிகரித்துள்ளது. கனடாவில் ஏப்ரல் மாதத்தில் மேலும் 2 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டு 7.8 சதவீதமாக மார்ர்சில் இருந்த வேலைவாய்பின்மை வீதம் ஏப்ரலில் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெப்ரிவரியில் வேலைவாய்ப்பின்மை வீதம் 5.6 அக இருந்தது.

கனடாவின் மாநிலங்களில் அதிகரித்த வேலை வாய்பின்மை வீதத்தை கியூபெக் வெளிப்படுத்தி உள்ளது. அங்கு வேலைவாய்ப்பின்மை வீதம் 17 சதவீதமாகியுள்ளது. தமிழர்கள் அதிகம் வதியும் ஒன்ராரியோவில் வேலைவாய்பின்மை வீதம் 11.3 சதவீதமாகியுளள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவில் 11.5 சதவீதமாகும்.

தமிழர்கள் கனடாவில் அதிகம் வசிக்கும் கனடாவின் பெருநகரங்களிலான வேலைவாய்பின்மை வீதம் வருமாறு: சிறிய தரவைக் கொண்டு கணிக்கப்பட்டதால் இது மாறுபடும் வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையும் இதில் அடங்கும். ரொரன்ரோ 7.9 மொன்றியல் 10.5 ஒட்டாவா 6.3 வோட்டலூ 7.8 ஒசாவா 8.5

இதேவேளை அமெரிக்காவில் ஏப்ரலில் மட்டும் 20.5 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டு அமெரிக்க வேலைவாய்பின்மை வீதம் ஏப்ரல் முடிவில் 14.7 சதவீதமாகியுள்ளது. பெப்பிரவரியில் 3.5 சதவீதமாகவும் மர்ர்சி;ல் 4.4 ஆகவும் இருந்த அமெரிக்க வேலைவாய்பின்மை ஏப்பிரலில் மட்டும் 10.3 சதவீத அதிகரிப்பைக் கண்டது வரலாற்றில் ஏற்ப்பட்ட பெரும் அதிகரிப்பாகும்.

2009 இல் ஏற்ப்பட்ட பொருளாதார முடக்கத்தின் பின் கடந்த 10 ஆண்டுகளில் சிறுகச் சிறுக சேர்க்கப்பட்ட 22.5 மில்லியன் வேலை வாய்ப்புக்களை அமெரிக்கா ஒரு மாதத்தில் இழந்துள்ளது. தற்போது முழுமையான முடக்கங்களில் இருந்து நாடுகள் சிறிது சிறிதாக வழமைக்குத் திரும்ப முற்படும் நிலையில் இதில் கணிசமான வேலைகள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும் இழக்கப்பட்ட முழுமையான வேலைகளும் மீண்டும் அமைய சில வருடங்களை எடுத்துக் கொள்ளலாம்.

அயர்லாந்தில் வேலைவாய்ப்பின்மை வீதம் 28.2 சதவீதமாகியுள்ளது. அங்கு இளைய வயதினரே பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 15 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டோரில் 52.3 சதவீதமானோர் வேலையின்றி இருக்கின்றனர்.

ஜேர்மனியில் 10.1 மில்லியன் பேரும் பிரான்ஸி;ல் 11.3 மில்லியன் பேரும் இத்தாலியில் 7.7 மில்லியன் பேரும் ஸ்பெயின்ல் 3.4 மில்லியன் பெரும் வேலை இழந்தமைக்கான அரச கொடுப்பனவுகளில் உள்ளனர்.