யாழில் தமிழ் 40 குடும்பங்களுக்கு உதவி செய்த சிங்கள சிறிலங்கா இராணுவ தளபதி

66

யாழ்ப்பாண மாவட்ட சிங்கள கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோன வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் தெரிவு செய்யப்பட்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் இதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய பகுதியில் உள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

2009 இதே மாதம் அனைத்து வளங்களையும் தடைசெய்து கொத்துக் குண்டுகளால் கொலை செய்த பாதகர்கள் சோறு கொடுத்து பாவ விமோசனம் தேடப் பார்க்கிறார்களா? என கேள்வி தனக்குள்ளே புறுபுறுத்தபடி கடந்து செல்கிறார் அந்த முதியவர்.மேலும் தமிழ் மக்களில் கொரானா தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களை மீதி தமிழர்களே பார்த்துகொள்ள ஒரு பொறிமுறை இருக்கும் பட்சத்தில் உதவி என்ற பெயரில் இடம்பெறும் இவ்வாறான அந்நிய சக்திகளின் ஊடுருவல்கள்,ஆக்கிரமிப்பு போன்றவற்றை இனிவரும் காலங்களில் கட்டுபடுத்தலாம்.