கொள்ளையர்களை கைது செய்து நகை பணம் மீட்பு

56

கொள்ளையர்கள் மூவர் கைது,  நகை  பணம் மீட்பு

யாழ் நீர்வேலிப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை அதிரடியாக கைது செய்தது கோப்பாய் பொலிஸ்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரால் ஊரெழு பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட நகை ,பணம் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.