முச்சக்கர வண்டி விபத்து, இருவர் படுகாயம்

189

கிளிநொச்சி பளைப் பகுதியில் இன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.