தமிழ் மக்களை விக்னேஸ்வரன் ஏமாற்றுவார் என நம்பிய சம்பந்தரை ஏமாற்றிய விக்னேஸ்வரன்

104

விக்னேஸ்வரன் சம்மந்தரை ஏமாற்றிவிட்டார் என தெரிவித்த சுமந்திரனின் கருத்திற்கு பதில் அறிக்கையை வெளியிட்ட த.ம.கூட்டணியின் பேச்சாளர் அருந்தவபாலன்.

சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே. கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு அறிமுகமில்லாத முகம்,போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்துதங்களைப்போல தமிழ்மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய சம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்ததுஉண்மையே.

ஆனால் தமிழ்மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை. சம்பந்தன் எதிர்பார்த்தது போல* தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத்தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் கைவிடவில்லை* ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை* இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை* பதவி,பணம்,சுகபோகங்களுக்காக விலைபோகவில்லை* சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணைஎடுப்பதற்கு துணை நிற்கவில்லை* கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை* இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத் துணை போகவில்லை என்பதனால் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது அவர்கள்தான் சொன்னதுக்கு மாறாக தமிழ் மக்கள் பேரவையை அரசியல்கட்சியாக மாற்றவில்லை. பேரவை வேறு. தமிழ்மக்கள் கூட்டணி வேறு. இக் கட்சி கூட தமிழ்மக்களின் வேண்டுகோளைப் புறந்தள்ளமுடியாது உருவாக்கப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக்கட்சிதோன்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது. மேலும் நல்லாட்சியிடம் சம்பந்தன் ஏமாறவில்லை எனச் சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்துவிட்டோம் எனதலைவர் உட்பட அவரது கட்சியினர்சொன்னது பொய்யா?அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் சுமந்திரனும் சம்பந்தனும்எமது மக்களை மட்டுமல்ல அவரது கடசியினரையும் ஏமாற்றியது உண்மையாகும்.

க. அருந்தவபாலன்