“கொரோனா” கண்காணிப்பு நிலையத்தில் இருந்து 233 பேர் விடுவிப்பு

59

கொடிகாமம் விடத்தற்பளையில் 522து படைப் பிரிவில் உள்ள “கொரோனா” தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திலிருந்து 14 நாட்களின் பின்னர் இன்று 233 பேர் றவிடுவிப்பு.

இவர்கள் இந்தியாவுக்கு புத்தகாயாவுக்கான யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில் 233 பேர் குறித்த தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்,இவர்களில் 157 பெண்கள் மற்றும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டு அவர்களது உறவினர்களுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிகழ்வு யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி தலைமையில் இடம்பெற்றது.