தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (TELO) ஆரம்பகால அரசியல் வகுப்புகளில், விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழித்தே தீரவேண்டுமென வெளிப்படையாகவே கூறப்பட்டது. PLOTE இடமும் இதே கொள்கை இருந்தது. அதேபோல இந்தியஇராணுவத்துடன் ஒட்டிக்கொண்ட EPRLF மற்றும் ENDLF இடமும் இதே நிலைப்பாடு இருந்தது. விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டுமென்று கங்கணம் கட்டி நின்ற இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிறார் இலண்டன் ஈழபூமி ஆசிரியராக இருந்த திரு.சண்முகலிங்கம் அவர்கள். (இப்போது சகோதரப் படுகொலை பற்றி புலிகள்மீது பழி சுமத்தி கண்மூடித்தனமாகக் கம்பு சுற்றுபவர்கள் வரலாற்றை அறியவும்)
தலைவர் பிரபாகரனுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் எதிரான மேற்கூறிய அனைத்து இயக்கங்களிலும் அங்கம் வகித்து, பின்னர் விலகிக்கொண்ட திரு.புஷ்பராஜா அவர்கள் எழுதிய “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
புதிய தமிழ்ப்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், தனபாலசிங்கம் எனப்படும் செட்டி என்பவரும் அதில் முதன்மையானவராக இருந்தார். ஈழவிடுதளைக்காக ஏதாவது செய்யவேண்டுமென இணைந்த இளைஞர்களை அவர் தீயவழிகளில் பயன்படுத்தமுயன்றார். பிரபாகரனுக்கு இது அறவே பிடிக்கவில்லை. 1975 இல் செட்டி காவல்துறையால் கைதுசெய்யப்பட பிரபாகரன் அவ்வியக்கத்தின் முதன்மையாளர் ஆனார். ஆனால் அவர் செட்டியைப்போலல்லாது , இளைஞர்கள் மிக நேர்மையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தினார். கடுமையான கட்டுப்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். பிரபாகரன் ஒரு தனிமை விரும்பி. தனது சகாக்களுடன் கூட தேவைக்கு அதிகமாகப் பேசமாட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்களைச் சரியான கண்ணோட்டத்தில் மதிப்பிட வல்லவர்.
அவரது நெறிமுறையான பண்புகளும் ,ஒழுக்கமும், கட்டுப்பாடுகளுமே “தமிழீழ விடுதலைப் புலிகள்” உருவாக அடிப்படையாக அமைந்தது.
மாண்புமிகுதலைவன்
நன்றி – தேவன்