உலகியல்

49

இந்த உலகில் எந்தவொரு மன்னனும் தான் போர்செய்ததற்காகவோ (அ) லட்சக்கணக்காக மக்களைக் கொன்றுகுவித்ததற்காகவோ மனம்வருந்தி ஆட்சியை விட்டுக்கொடுத்ததாக நான் அறியவில்லை. அசோக மன்னன்கூட தான் போர் செய்ததற்காக வருந்தி புத்தமதத்தை தழுவினானே ஒழிய அப்போரால் வென்றெடுத்த நாடுகளை அவன் ஒருபோதும் திருப்பிக்கொடுக்கவில்லை.

ஆனால் கி.பி 1945 –க்கு பிறகு கிழக்கிந்தியக்கம்பெனி, முழுஉலகையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து. இந்த பூமியில் இனி பிடிப்பதற்கு நாடுகளே இல்லை என்கிற சூழலில் அது திடீரென மனம்திருந்தி தனது ஆளுமைகளை சுதந்திரம் என்ற பெயரில் விட்டுக்கொடுத்தது. அமைதிக்கு பேர்போன அசோகனே செய்யத்துணியாத செயலை அன்று கிழக்கிந்தியக்கம்பெனி செய்து காட்டியது. நியாப்படி பார்த்தால் அதற்கு பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் செய்தியில்லை.

கிழக்கிந்தியக் கம்பெனி வெறும் 15,000 அரசு ஊழியர்களை வைத்து சுமார் 300 ஆண்டுகளாக இந்தியாவைக்கட்டி ஆண்டது. கிட்டத்தட்ட 20 –க்கும் மேற்பட்ட தனித்தனி தேசிய இனங்களை தனது நிர்வாகத்தை மட்டுமே வைத்து “இந்தியம்” என்னும் போலியான வரையறைக்குள் போட்டு முடக்கியது. தார்சாலைகள், இரயில் போக்குவரத்து, விமானம் என அனைத்து நிர்வாகத் துறையினையும் உருவாக்கி வளர்த்தெடுத்தது. இத்தனைக்கும் ஓட்டு அரசியல் இல்லை. மேடை போட்டு வாய்கிழியக் கத்தவுமில்லை. M.L.A –க்கள், M.P –க்கள், கவுன்சிலர் என்று யாருமே இல்லை. வெறும் அரசு ஊழியர்களை மட்டுமே வைத்து இத்தனையும் செய்துகாட்டியது.

1947 –க்கும் முன்னர் கிழக்கிந்தியக் கம்பெனி என்னும் பெயரில் ஆண்டுவந்த அதே நிறுவனம் 1947-க்கு பின்னர் Reliance, Hindustan Unilever Ltd, Smithkline Beecham Consumer Healthcare ltd, ITC போன்ற வெவ்வேறு பெயர்களில் நம்மை தொடர்ந்து ஆண்டுவருகிறது. உண்மையில் இந்த அரசியல்வாதிகள் என்போர் இக்காலத்திலும், எக்காலத்திலும் ஒரு ஆணியைக்கூட புடுங்கியது கிடையாது. இவர்கள் எந்தவொரு திட்டத்தையும் வகுப்பதில்லை செயல்படுத்துவதும் இல்லை. 5 வருடங்களில் ஒரு முதலமைச்சரோ (அ) அமைச்சர்களோ எந்தவொரு Planning, Analysis & Execution –ம் செய்வது கிடையாது. அந்தத் தகுதியும் அவர்களுக்கு இல்லை. அரசு ஊழியர்கள் கொடுக்கும் பைல்களில் கையெழுத்து போடுவது மட்டும்தான் அவர்களது வேலை.

உண்மையாக திட்டம் போடும் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களை கம்பெனிகளே தேர்ந்தெடுக்கிறது. ஜோக்கர்களை மட்டும்தான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தற்போது கிழக்கிந்தியக்கம்பெனி எவ்வாறு மறைந்திருந்து தன்னை வலுப்படுத்திக்கொண்டே வருகிறதோ, அதேபோல அக்காலத்தில் கலிங்கமும் தன்னை மறைத்துக்கொண்டு வெவ்வேறு பெயர்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைச்சான்றுகளின்படி கல்வி கற்பதால் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. அரசு இயல் என்பதே உண்மையான கல்வி. ஒரு தேசிய இனம் எழுவதற்கு இதுவே அடித்தளம். இதனை யாரும் எக்காலத்திலும் கற்றுத்தரமாட்டார்கள்.

N Ezilan