மதுரை அருகே முஸ்தபா, மனைவி இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் சளி, இருமல் இருந்ததால், அக்கம்பக்கத்தினர் ‘ரகசியமாக’ சுகாதார துறை, போலிசுக்கு தகவல் தந்தனர். சுகாதார துறை, போலிஸ் விசாரித்து 108 ஆம்புலன்சு கோரி தாமதமானதால், மினி லாரியில் ஏற்றி அனுப்பினர். இதை சிலர் காணொளி எடுத்து முஸ்தபாவுக்கு கொரானா உள்ளதாக வதந்தியும் பரப்பினர். முஸ்தபா கொரானா இல்லை என டெஸ்ட் வந்தும், தன்னை பற்றி வதந்தியால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது மட்டுமல்ல, கொரானாவை காட்டி சக மனிதனை ஒதுக்குவது, விலகுவது, அவனை நோய் பரப்ப வந்த எதிரியாக பார்ப்பது என,
கொரானா, சமூகத்திலிருந்து தனிமைப்பட்ட பெரும் சுயநலமிக்க தனி மனிதர்களை உருவாக்க போகிறது. அந்த அமைப்பு, பெருமுதலாளிகளால் எளிதில் வழி நடத்தப்பட்டு சுரண்டப்படும் அமைப்பாய் இருக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்திற்கு சொன்ன தமிழ் சமூகம் அழிக்கப்படுகிறது.
ஒருவர்க்கு ஒருவர் உதவியாக
சமூகமாய் ஒன்றிணைந்து நிற்போம்.
கொரோனா வை வெல்வோம்.
Mathi vanan