வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் சிங்கள ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவருக்கு மற்றொரு வழக்கில் தண்டனைக் காலம் நிறைவடையாததாகல் அந்தக் கைதி மீளவும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 31ன் கீழ் பெரும்குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, சிறு குற்றங்களில் தண்டனை பெற்ற நபர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், தண்டம் செலுத்த முடியாத கைதிகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.
இன்று விடுதலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக சிறைச்சாலை வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நீண்ட காலமாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை மறந்து போனதா அரசு? தவிர இவற்றை பேசு பொருள் ஆக்குவதை தவிர்க்கும் தமிழ் தலைமைகளும் ஊடகங்களும்,உரிய நேரத்தில் உரியவற்றை வற்புறுத்துவதன் மூலமே நமக்கான நியாயத்தை பெற்று கொள்ள முடியும்.அவர்கள் வீட்டில் யாரும் போராட சென்றிருக்கமாட்டார்கள்.அதனாலோ என்னவோ இவர்களின் அசமந்த போக்கும் பொறுப்புடைமையும்.