யாழில் அதிகரிக்கும் சட்டவிரோத மது விற்பனை,குடிக்க அலையும் குடாநாட்டு மக்கள்

51

சட்டவிரோத மது விற்பனை மூவர் கைது 91 மது போத்தல்கள் மீட்பு 
உரும்பிராய் பொக்கனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை செய்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 91 போத்தல் சாராய போத்தல்கள் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்கவின் வழிகாட்டலில் போலீஸ் பரிசோதகர் ஜெயசிங்க தலைமையில் களம் இறங்கிய போலீசார் உரும்பிராய் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 91 சாராயப் போத்தல்களை பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்துள்ளனர்

மிதமிஞ்சிய வெளிநாட்டு பணமும்,மது வெறியும் ச இன்று சட்டவிரோத மது விற்பனையை அதிகபடுத்தியுள்ளது. மதுபான நிலையங்களை சிறிலங்கா அரசு மூடியுள்ள நிலையில்,இவ்வாறா குடி வெறி சமூகத்தினை பயன்படுத்தி முதலாளிகள் பணம் பாத்து கொண்டுள்ளனர்.இவ்வாறான ஒரு குடி வெறி சமூகம் நாளை தமிழகம் போன்று மது போத்தலுக்காக வோட்டுக்களை வித்து தம் உரிமைகளை அடகு வைக்க போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.குடி மக்களின் மனமறிந்த அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களை முன்னிட்டு இவற்றில் இறங்குவார்கள்.