சுமந்திரன்+சிறிதரன் கூட்டு, மாவைக்கும் சராவுக்கும் ஆப்பு

134

அண்மைக் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகளுக்கிடையில் இருந்த புடுங்குப்பாடுகள் தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளும் தொடங்கியுள்ளது.

சரவணபவனிற்கு தேர்தலில் நிற்க சந்தர்ப்பம் வழங்க கூடாது என சுமந்திரன் கட்சித்தலைவரிடம் தெரிவித்த போது கட்சிக்குள் புடுங்குப்பாடு அதிகரித்தது. கடைசியில் மாவையிலும் கை வைத்தார் சுமந்திரன். மாவை சேனாதிராசாவை தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வி.

இச்சந்தர்ப்பத்தில் தான் சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகளை விமர்சித்திருந்தார். இதனை சாட்டாக வைத்து அனைத்து தரப்பினரும் சுமந்திரனை தாக்க இதுதான் சந்தர்ப்பம் என தன் பங்கிற்கு சுமந்திரனை விமர்சித்து அறிக்கை ஒன்றை விடுத்தார் சரவணபவன். கொடுக்கை கட்டிக்கொண்டு மல்லுக்கு நின்ற சராவை பார்த்து அவரின் தொண்டர்கள் அசந்து போனார்கள் , ஏனெனில் சரா ஒன்றும் விடுதலைப்புலிகளை நேசிப்பவரோ ஆதரவாளரோ கிடையாது தன் வியாபாரத்திற்காக அவர்களின் ஆதரவாளராக காட்டிக்கொண்டார் என்பது சராவின் அடிப்பொடிகளிற்கு நன்றாகவே தெரியும்.இந்நிலையில் சரவணபவன் மாவையை சந்தித்து சுமந்திரனிற்கு எதிராக பேசிய இரகசிய உரையாடல் தவறுதலாக சராவின் மொபைல் போனில் இருந்து முகநூல் நேரலையில் ஒளிபரப்பாகி வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் கடுமையாக கொதிப்படைந்தனர் சுமந்திரனின் ஆதரவாளர்கள்.

விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனாக காட்டி அரசியல் செய்துவரும் கிளிநொச்சி நாட்டாமை என அழைக்கப்படும் சிறிதரன் சுமந்திரனின் புலி எதிர்ப்பு கருத்துக்களுக்கு எந்தவித கருத்துக்களையும் கூறாமல் அமைதியானார். ஏனெனில் தமிழரசுக் கட்சிக்குள் அதிகாரம் மிக்கவராக வலம்வரும் சுமந்திரனோடு இணைந்து பயனித்தால் தான் தனது எதிர்காலத்திற்கு நல்லது என எண்ணிய சிறிதரன் வாய்மூடி ஊமையானார்.

இந்நிலையில் சுமந்திரனின் ஆதரவாளர்கள் சிறிதரனை சந்தித்து இருவரும் இணைந்து மாவைக்கும் , சராவிற்கும் பாடம் புகட்டுவது என முடிவெடுத்துள்ளார்களாம். பார்ப்போம் மக்கள் யாருக்கு பாடம் புகட்டுகிறார்கள் என.