உண்மையில் நான் பெருமை படுகிறேன் ஜயா உங்கள் சேவையை எண்ணி…..
நான் உங்களுடைய வரலாற்றை அந்தளவிற்கு அறிய வயதில் பெரியவன் அல்ல இருந்தும் நான் உங்களுடைய சேவையை எண்ணி பெருமை படுகிறேன் …
யாழ் போதனா வைத்திய சாலையில் 2012ம் ஆண்டு கடமை பொறுப்பேற்று இன்று வரை யாழ் வைத்தியசாலை உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வளர்ச்சி கண்டமைக்கு ஜயா உங்கள் ஒத்துழைப்பும் சேவையும் அளப்பரியதே …..
அன்றும் இன்றும் மக்களுக்கு சலுப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு அர்பணிப்புள்ள சேவையினை வழங்கி இன்று மக்களின் மத்தியில் நேர்மையின்..தோழனாக காணப்படுகின்றார் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் லஞ்ச ஊழலற்ற அதிகாரி தேர்வில் இடம்பெற்று சிறந்த அதிகாரி என்ற ரீதியில் அனைவரது பாராட்டுக்களையும் புகழையும் பெற்றமை யாவரும் அறிந்ததே……
யாழ் போதனா வைத்தியசாலையில் ஏனைய உயர் தொழிநுட்ப வசதிகள், மற்றும் இலவச சிகிச்சைகள்…ஆரம்பமாவதற்கும் காரணமானவர்…
தற்கால அசாதாரண சூழ்நிலையின் மத்தியில்
“தாவடி பகுதியில் தந்தைக்கு கொரோனா ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுப்பிய நிலையில் தாய்க்கும் சிறிய மகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டவேளை அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதியான வேளை அந்த தந்தையின் சிறிய மகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் கவர்ந்ததே”
தற்காலத்தில் நாட்டின் ஏற்பட்டுள்ள நோய்நிலமை காரணமாக யாழ் மக்களுக்கு ஆறுதலானதும் உண்மைக்குமான கருத்துக்கள் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வு, தடுப்பு வழிகள் அனைத்தையும் தாமதமின்றி தனது முக நூல், மற்றும் ஏனைய செய்தி தளங்களுடாக கூறி மக்களுக்கு ஆறுதல் வழிகாட்டியாக விளங்கி வருகின்றார்.
நான் கூட உங்களது செய்தியை கேட்டு அதிகளவு திருப்தியும் மன தைரியமும் அடைந்தது உண்டு. மேலும் தற்கால நோய் நிலைமையின் தாக்கம் அதிகளவு யாழ் நகரை பாதிப்புக்குள்ளாமைக்கு பெரும் பங்கு உங்களையே சேரும். இனி வரும் காலங்களிலும் உங்கள் சேவையை மிகவும் சிறப்பாக மக்கள் எதிர்பாக்கின்றனர்.





– enzo