Intel நிறுவனம் உருவான கதை

74

அது 1956 ஆம் ஆண்டு….

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ் பெற்ற Bell labs என்ற நிறுவனத்தில் செமிகண்டக்டர் துறையில் அதுவரையில் பணிபுரிந்து கொண்டிருந்த வில்லியம் ஷாக்லி என்ற பொறியாளர் சொந்த நிறுவனம் தொடங்கும் திட்டத்துடன் தன் பணியை இராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார்.வெளியே வந்த கையோடு தன் புது நிறுவனத்தையும் தொடங்கினார்.அதுவரையில் செமிகண்டக்டர்கள் எனப்படும் சிப்புகள் ஜெர்மானியம் என்ற தனிமத்தைக் கொண்டே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.ஜெர்மானியத்தின் விலை சற்று அதிகம்.வில்லியம் ஷாக்லி ஜெரமானியத்திற்கு பதிலாக சிலிக்கான் என்ற தனிமத்தைப் பயன்படுத்தி செமிகண்டக்டர்களை உருவாக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

அதை அவரது புதிய நிறுவனம் மூலம் தயாரிக்கத் திட்டமிட்டார்.அதற்காக எட்டு பொறியாளர்களை பணியில் அமர்த்தினார்.ஆனால் அவர் நினைத்தது போல அவரது நிறுவனம் செயல்படவில்லை.ஒரு நாள் திடீரென அவரது நிறுவனத்தை மூடிவிட்டார்.எட்டு பொறியாளர்களுக்கும் வேலை போனது.அதில் ஆறு பொறியாளர்கள் தங்கள் விதியை நினைத்து நொந்து கொள்ள,இரண்டு பொறியாளர்கள் வேறு விதமாக அந்தச் சூழ்நிலையை எடுத்துக் கொண்டார்கள்.அந்த இருவரும் சேர்ந்து ஒரு புதிய நிறுவனத்தைத் துவக்கினார்கள்.அதில் அவர்கள் இருவர் மாத்திரமே பணியாளர்கள்.திட்டமிட்டு உழைத்தார்கள்.ஷாக்லியால் முடியாததை அவர்கள் தங்களது புதிய நிறுவனம் மூலம் செய்து காட்டினார்கள்.

இன்று வரையில் அவர்களது அந்த நிறுவனம் தான் கணிணித் துறையில் உச்சகட்டத்தில் இருக்கிறது.

எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும்.நம் முயற்சியையும் மனதையும் மட்டும் தளரவிடக் கூடாது என அவர்கள் நிரூபித்தார்கள்.

அந்த இரண்டு பொறியாளர்கள் தான் Robert noyce மற்றும் Gordon Moore.

அந்த நிறுவனம் தான்-“இன்டெல்-Intel”…

இந்த கொரோனா காலத்தில் நிறைய வேலை இழப்புகள் வரலாம்.அப்படி வந்தால் கலங்க வேண்டாம்.உலகம் அதோடு முடிந்து விடுவதில்லை.

இது ஒரு அருமையான காலம்.சொந்தமாக எதாவது தொழில் செய்யலாம் என்று திட்டம் போடுபவர்களுக்கு இது அட்டகாசமான காலம்.

என்ன தொழில் தொடங்கலாம்? ஒரு ஐடியாவும் வரவில்லையே? பணம்,இடம்‌… என்று சகலமும் வேண்டுமே…

கேள்விகள் வரும்… வரட்டும்.

அனைத்தையும் ஒரு தாளில் எழுதுங்கள்.

சமூகத்தை நன்றாக உற்றுப் பாருங்கள்.அவர்களுக்கு எது தேவை என்பதை நன்றாக கவனியுங்கள்.மனதில் தோன்றும் ஐடியாக்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி வையுங்கள்.எதையும் விடாதீர்கள்.மக்களின் பிரயாண நேரத்தைக் குறைக்க மலிவு விலை ஹெலிகாப்டர் போன்ற ஒன்றை செய்யலாமே என்று தோன்றினால் கூட அதையும் எழுதி வையுங்கள்.ஐடியாவில் மடத்தனம்,முட்டாள்த்தனம் என்று எதுவும் இல்லை.

இப்படி எழுத,எழுத ஒரு கட்டத்தில் நமக்குள்ளேயே கேள்விகள் வரத் துவங்கும்.அந்த கேள்விகள் பதில்களை நோக்கி நம்மை விரட்டும்.பதில்கள் தெளிவைத் தரும்.அந்தத் தெளிவு ஒரு பாதையைக் காட்டும்….