பிரித்தானியாவில் வசித்து வந்த , ஈழத்தில் மீசாலையை சொந்த இடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளார்.
கிருஷ்ணசாமி சியாமளன் (வயது 42 ) என்பவரே இன்று (04.04.2020) வைத்தியசாலையில் உயிரிழந்தவராவார்.
இலண்டனின் டார்ட்போர்ட் (Dartford) பகுதியில் வர்த்தக நிலையமொன்றினை இவர் நடத்தி வந்துள்ளார்.வலிய வந்து நட்பு பாராட்டி பழகும் இனிமையானவர் என இவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரது மூத்த மகனுக்கு (வயது 2) மற்றும் ஒரு பிள்ளை பிறந்து 6 மாதம். இவரின் உயிரிழப்பு அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவருடன் சேர்த்து இதுவரை ஐந்திற்கு மேற்பட்ட தமிழர்கள் பிரித்தானியாவில் கொரோனாத் தொற்றால் பலியாகியுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு இழப்பால் துயறுறும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பிரித்யானியாவில் கொரோனாத் தொற்று தீவிரமடையும் என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ள நிலையில் …
உறவுகளே! வீடுகளை விட்டு வெளியே செல்லாது அவதானமாக இருங்கள்.
