இந்தியா உண்மையில் பிராந்திய வல்லரசா?

84

ட்ரம்பின் மிரட்டலுக்கு இந்திய அரசு பணிந்து விட்டது பெரிய விடயமல்ல இத்துணூண்டு சிங்களத்திற்கே பணிய வேண்டிய நிலையில்தான் இந்திய ஆளும் வர்க்கம் இருக்கிறது.

விபரம் கீழே உள்ளது படியுங்கள்

“இந்திய உளவுப் பிரிவான ரோவின் சவுத் புளொக்கில் இருந்த அதிகாரிகள் செய்மதிப் படங்களின் மூலம் புலிகளின் நகர்வுகளை அவதானித்து போர்முனையிலிருந்த இலங்கை – இந்தியக் கூட்டுபடைகளுக்கு தகவல் வழங்கியதன் மூலம் தமிழ்ப் போராளிகள் மீதான இலங்கைப் படைகளின் வெற்றிக்கு வழிவகுத்தனர். முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போர் அழிவுகளின் முழுமையான ஆதாரங்களை செய்மதிமூலம் சேகரிக்கும் நிலமையில் ரோ அன்று இருந்தது. ரோவினால் எடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனக்கொலையின் செய்மதிப் படங்கள் இலங்கைக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியதால், புலிகளுக்குப் பின்னான காலங்களில் இலங்கையை தம் வழிக்குக் கொண்டுவர அவை உதவக்கூடும் என்று நம்பியது. ஆனால் அதன் எதிர்பார்ப்பிற்கு முற்றும் எதிராகவே அனைத்தும் நடந்தன.

இந்தியாவின் இந்த நகர்வினால் கொதிப்படைந்த கோத்தபாய அவர்கள் இலங்கை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படும் பட்சத்தில் இனக்கொலையில் சவுத் புளொக்கின் ஊடாக இந்தியா வகித்த பங்கு அம்பலமாக்கப்படும் என்று எச்சரித்ததன் மூலம் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தார். கோத்தபாயவின் திடீர் அச்சுறுத்தலினால் கலங்கிப்போன இந்தியா அதிரடித் திருப்பமாக இலங்கைய சாந்தப்படுத்தும் நோக்கில், அதற்கெதிராக மே 2009 இல் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமைப்பினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்னின்று எதிர்த்து நிர்மூலமாக்கியது. இந்தியாவை நீண்ட காலத்திற்கு தனது கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய முக்கியமான துரும்புச் சீட்டு இன்று இலங்கையிடம் இருக்கிறது.”

இதை எழுதியது வேறு யாருமல்ல வி.எஸ் சுப்ரமணியம் என்ற RAW அதிகாரி.

இதுதான் இந்தியாவின் இராஜதந்திரம்.

இந்த முட்டாள்களால் வீழ்த்தப்பட்டு விட்டோம் என்பதுதான் இன்று தமீழீழ மக்களாகிய எம்மை அவமானத்தில் கூனிக் குறுக வைக்கிறது.

இந்தியாவிடம் கொரோனாவிற்கு மட்டுமல்ல வேறு எந்த நெருக்கடிக்கும் தீர்வு இல்லை.

அதுதான் கையத் தட்டுகிறார்கள் / விளக்குப் பிடிக்கிறார்கள்/ நாளை மாட்டு மூத்திரம் குடிக்க சொல்வார்கள்..

அதற்குத் தயாராவதுதான் இந்திய ஒன்றிய மக்கள் முன் உள்ள ஒரே தீர்வு.

ஆமென்..

– பரணி