கொரானா நோய் தொற்று தீவிரம் – பிரிட்டிஷ் பிரதமர் அவசர சிகிச்சை பிரிவில்

112

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர், பொரிஸ் ஜோன்சனுக்கு [55 வயது] கொரோனா’ வைரஸ் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருப்பதால், தனிமையில் இருந்த அவர், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமையில் இருந்து, பணிகளை கவனித்து வந்தார்.

கொரோனா அறிகுறிகள் தொடர்ந்து தென்பட்டதால், அவர் லண்டனில் உள்ள செயின்ட் தொமஸ் மருத்துவமனையில் மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நோயின் தொற்று அதிகரித்து காணப்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பிரித்தானிய நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு ஒக்ஸிஜன் (oxygen) சிகிச்சை அளிக்கப்பட்டு வென்டிலேட்டரில் (ventilator) வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை சுகாதார செயலாளர் Matt Hancock மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி Chris Whitty இருவரும் கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்டுள்ளனர், எனினும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் சிலருக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.