கோவிட் – 19: இந்தியாவில் விரைந்து முன்னேறும் தமிழகம்.

60

இந்தியா ஊடகங்கள் எங்களின் வெப்பநிலை அதிகரிப்பதால், கோவிட்-19 கோவிந்தாவாகிவிடும் எனும் வகையில் நம்பிக்கையை ஊட்டுகின்றன. அந்தவகையிலான எவ்வித தடயங்களும் இதுவரை பெரிதாக வெளிப்படவில்லை. சரி இந்தியா இவ்விடயத்தில் என்ன சொல்கிறது? என்று பார்த்தால், அங்கும் பதில் அக்கருத்தியலுக்கு எதிராகவே உள்ளது. ஏன் என்கிறீர்களா? இந்தியாவில் அதிக தொற்றை வெளிப்படுத்தி நிற்கும் மாநிலங்களில் பெரும்பான்iயானவை தென் மாநிலங்களே. அவை எவை? அங்கு இன்று வெள்ளி வெப்பநிலை செல்சியசில் என்னவென்று பார்ப்போமா?

அதிக தொற்று, மகாராஸ்ரா – 423, மும்பாய் வெப்பநிலை 33. அடுத்து தமிழ்நாடு – 309, சென்னை வெப்பநிலை – 33. அடுத்து கேரளா – 286, திருவனந்தபுரம் வெப்பநிலை – 31. அடுத்து தெலுங்கானா – 154, கைதராபாத் – 30. அடுத்து ஆந்திரா – 149, அமராவதி – 29. அடுத்து 9 இடத்தில் கர்நாடகா – 124, பெங்களுர் வெப்பநிலை – 31. இடையில் டெல்கி 3வது இடத்தில் 293 நோய்த்தொற்றுடன் உண்டு. இந்தியாவின் எண்ணிக்கை கடந்த சில நாட்களிலேயே பெரிதும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எப்ரல் 1 – 601, ஏப்ரல் 2 – 545. மொத்த தொற்று 2567 ஆகவுள்ளது.

இருக்க ஏப்ரல் 1 நிலவரப்படி, இந்தியா மேற்க்கொண்ட சோதனைகளில் முடிவுகள் வந்துள்ள, 47 ஆயிரத்து 951 சோதனைகளில், 1637 பேர் நோய்த்தொற்று உடையவர்களாக காணப்பட்டுள்ளனர். அதாவது மில்லியன் மக்களுக்கு இந்தியா 35 சோதனைகளையே மேற்கொண்டுள்ளது. இது உலகில் சோதனைகளில் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். சிறப்பாக கட்டுக்குள் கொண்டுவந்த தென்கொரியா மில்லியனுக்கு 8572 பேருக்கு சோதனைகளைச் செய்துள்ளது. பரந்துபட்ட சோதனைகள் செய்யப்படவில்லையானானல், நோய்ப்பரம்பலை கண்காணிப்பதுவும், அது குறித்த தரவுகளுடன் கூடிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதுவும், இயலாது போவது மட்டுமன்றி, நிலைமை கட்டைவிட்டு இலகுவில் மீறிவிடும். இந்தியா பொன்ற நாட்டில் அவ்வாறான சூழ்நிலை ஏற்ப்பட அனுமதிப்பது பேரனர்த்தமாகிவிடும். ஆகவே வெறுமையாக ஊரடங்குகள் மட்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவராது, என்ற நிலையில் இந்தியா பெரும் சவாலுக்குள் நிற்கிறது.