இராணுவ வல்லாதிக்கத்தில் விழும் சிறிலங்கா ;

82

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அரச சமூக மட்டங்களில் அதிகளவிலான இராணுவம் பிரசன்னம் சிறிலங்கா முழுதும் கொண்டுவரப்பட்டு இராணுவ ஆட்சிக்குரிய வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.சிவில் சேவைகளுல் அதிகளவிலான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்ட வந்த நிலையில்,உலகை அச்சுறுத்தும் கொரானா பீதி சிறிலங்காவை ஆட்கொண்ட பின்னர்,நடைபெறும் அனைத்துமட்ட தடுப்பு நடவடிக்கைகளும் இராணுவத்திடம் கொடுக்கப்பட்டு சிறிலங்கா முழுதும் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மட்ட மக்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.அண்மையில் மரணதண்டனை பெற்ற மிருசுவில் படுகொலையாளி இராணுவ மேஜர் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டபாயவினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது