தமிழீழ படுகொலைகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றினை தயாரிப்பதற்காக பிரதியொன்று எழுத வேண்டியிருந்தது. அதற்காக சில தகவல்களைச் சேகரித்தேன். ஈழத்தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளிலிருந்து சிங்கள தேசத்தின் கோர முகத்தை கண்ணுற்றேன்.
வேறோர் உண்மையினையும் அது சொல்லாமல் இல்லை. இப்போது மாவீரர்களாகி விட்ட போராளிகளின் எழுச்சி இவ்வாறான இனப்படுகொலைகளை வெகுவாக தளர்த்தி விட்டிருக்கிறது.
1948 பெப்ரவரி 4ஆம் நாள் இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றார்கள். ஆனால், 1940 லேயே விவசாய அமைச்சராக இருந்த D.S செனநாயக்க, தமிழர் தேசமான அம்பாறை மாவட்டத்தில் அரச நிதி உதவியுடன் சிங்கள குடியேற்றங்களை அமைக்கிறார். சிங்களக் குடியேற்றங்களுக்கு காவல் துறை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. அங்கு பல விகாரைகள் அமைகின்றன. பெரிய காண்டா மணி பொருத்தப்பட்டு மணியோசை கேட்கும் துாரம் வரைக்கும் சிங்கள பௌத்தர்களுக்குரிய தேசமாக வரையறுக்கப்படுகிறது.
பௌத்த சிங்கள பெருந்தேசிய இனவாதம் கவனமாககாய்களை நகர்த்துகின்றது. இலங்கைத் தீவு முழுமையாகபௌத்த சிங்களவர்களுக்குரியது என்பதை அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
வரலாற்றை நாங்கள் மறந்து விட முடியாது. அன்னியர் இலங்கைத் தீவிற்குள் புகுந்தபோது மூன்று இராட்சியங்கள் இருந்தன. கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என்பனவே அவை.கோட்டை இராச்சியமும், கண்டி இராச்சியமும் சிங்களமக்களுக்குரியன. யாழ்ப்பாண இராச்சியத்தை தமிழர்ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர் தமது நிர்வாக வசதிகருதி, மூன்று இராச்சியங்களையும் ஒன்றாக்கி இலங்கை என்ற நாடாக்கினர்.
தமிழர் இறையாண்மையை தகர்க்கும் காரியங்கள் ஆரம்பகாலங்களில் நிகழ்ந்தன. 1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் S.W.R.D பண்டாரநாயக்க பிரதமர் ஆனபோது `சிங்களம் மட்டும்’ சட்டத்தைநாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதாவது அரச கருமமொழியாக சிங்களம் மாத்திரமே இருக்கும். வடக்குக்கிழக்கிலுள்ள நீதிமன்றங்களில் கூட சிங்கள மொழியில்மாத்திரமே வழக்காட முடியும். தமிழர் நிலத்தை அபகரித்தவர்கள், தமிழர் மொழியை அழிக்கத் துடித்தார்கள். D.S.செனநாயக்காவிற்கு `எதிர்’ அரசியல் நிகழ்த்திய பண்டாரநாயக்க தமிழர் விடயத்தில் `ஒத்த’ அரசியலையே செய்கிறார். பெரும்பான்மையான சிங்களமக்களும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையேஆதரிக்கிறார்கள் என்பது வெற்றி பெறுகின்ற சிங்கள அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது புரிகின்றது.
1956இல் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து தந்தைசெல்வா தலைமையில் சத்தியாகிரகம் நடைபெறுகின்றது. அகிம்சைப் போராட்டத்தின் ஒரு வடிவம் சத்தியாகிரகம். ஆனால், அதனை ஆயுதமும், வன்முறையும்கொண்டு அடக்குகிறது சிங்களம். சகிப்புத் தன்மைஇல்லை என்பதல்ல இதன் அர்த்தம். `ஏன் என்று கேட்கதமிழர் யார்’ ? அவர்கள் உழைக்கவும் சாகவுமே பிறந்தவர்கள், அடிமைகள்” என்பனே அதன் அர்த்தம்?. தமிழர்கள் இந்தத் தீவில் இரண்டாம் தர பிரஜைகளாகக் கூட அல்லர். இதைத் தான் சிங்களம் காலாதிகாலமாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி வந்தது.
நில அபகரிப்பு, மொழிப் பறிப்பு இவற்றைச் செய்த சிங்களம், மனிதத்தின் உன்னதமான உயிரையும் பறித்துக் கொண்டது. 1956ஆம் ஆண்டே அது ஆரம்பம். தமிழர் நிலத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களே இதனைச் செய்தார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் ‘இக்கினியாக்கலை’ என்ற இடத்தில் கரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 150 தமிழ்த் தொழிலாளர்களை அங்கு வேலை புரிந்த சிங்களக் காடையர்கள், சிங்கள இராணுவக் காவல் துறையின் உதவியுடன் கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும்கொன்றார்கள். அரைகுறை உயிருடன் இருந்தவர்களை தீயில் தூக்கிவீசினார்கள். இவ்வாறு 150 தமிழ் உயிர்கள் அகாலமாக மாண்டனர். இதுவே இலங்கைத் தீவில் தமிழின படுகொலையின் முதல் அங்கம்.
ஈழத்தில் தமிழரின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. இன்று நேற்று அல்ல, நெடுங்காலமாகவே சிங்களதேசம் செய்யாமல் விட்டதில்லை. ஒரு விதத்தில் அந்தத் தேசத்தில் நாம் பிறந்தோமே, வாழ்ந்தோமே, வளர்ந்தோமே என்று நினைக்கையில் வெப்பியாரத்தில் விம்முகிறேன். வாழ்வு ஒன்று, அந்த வாழ்வில் நரகத்தில் இடர்படுவதா?
சில லட்சம் தமிழர்கள் வாழும் அந்த சிறிய தீவில் தமிழர்மீதான இனப்படுகொலைகள் எவ்வளவு நேர்ந்திருக்கின்றது என்பது தெரியுமா? 158 இனப்படுகொலைகள் 1956இலிருந்து 2008 வரை நிகழ்ந்தவை இவை. தமிழர் என்கின்ற ஒரேஒரு காரணத்திற்காக சிங்களப் பேரினவாத அரசு செய்த அட்டூழியம் இது. இங்கு வெள்ளாளர் என்றோதலித் என்றோ வேறுபாடு காட்டவில்லை. தமிழர் என்ற ஒரே ஒரு காரணம் தான்.
D.S.செனநாயக்க முதல் கொண்டு மகிந்த வரை அத்தனை சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழர்கள் இரத்தில் தம் கையை நனைக்காமல் விட்டதில்லை. வேதனை மீதூரப் பெற்று இதனை எழுதுகிறேன். ஒவ்வொரு இனப்படுகொலைகளையும் வாசிக்கும் போதுநெஞ்சு வெடிக்கின்றது. இந்த 158 இனப்படு கொலைகளின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் மேவியது. இது வெறும் இலக்கமல்ல. இதயத்தைத் துளைக்கும் வேதனை.
இந்தத் தகவல்களைத் தேடித் திரிந்தபோது ஒன்றை உணர முடிந்தது. போராளிகள் தலை நிமிர்த்தி எழுச்சி காண்கின்றபோது இவ்வாறான இனப்படுகொலைகளின் வீரியம் குறையத் தொடங்கியது. காரணம் உணர்வது கடினமல்ல. ஆயுதத்திற்கு ஆயுதம் பதில் சொன்னது. அதனைத்துÖக்கியவர்கள் சொன்னார்கள். அதைத் தூக்கியவர்கள், அதனால் போராளியானார்கள். மாவீரர்களாகி மனதில் நின்றார்கள், நிற்கின்றார்கள்.
என் தலை தாழ்த்தி, உடல்சரித்து, கை கூப்பி வணக்கம் தருகின்றேன், மாவீரர்களுக்கு.