தூரத்தில் இருந்த நம் துயர்

அந்தப் பேரிடர் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, மூன்று மாதங்களாக கொட்டவேண்டிய பெருமழை ஒரு சில நாட்களில் சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கொட்டிய பேரிடரைச் சொல்கின்றேன். அந்தப்பேரிடரில் துக்கிற்றுத் தவித்த சென்னை, கடலுார் வாழ் மக்களுக்கு ஓர் ஆறுதலாகவும், சிறிய நிதி உதவியாகவும் செய்வதைத் தவிர வேறு எதைச் செய்ய முடியும்? ஆனால், அவை குறித்த சில விடயங்களைப் பகிரலாம் எனவிரும்புகிறேன். இந்தப் பெருமழையை யாரினாலும்தடுத்து நிறுத்தி விட முடியாது. இது இயற்கையின் சீற்றம்,ஓர் ஊழி, ஆனால் இந்தப் பேரிடரை ஓரளவு தணித்திருக்கமுடியும். அது தனி மனிதரால் செய்திருக்க முடியாதகாரியம். ஓர் அரசாங்கத்தால் செய்திருக்க வேண்டியகாரியம். `இந்த நாட்களில் மழை பெய்யும், இதுவரைநாளிலும் பார்க்க பெருமழையாக இருக்கும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.’ என்று `தமிழ்நாடுஅரசு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும், முடியும்’.ஆனால் தமிழ்நாடு அரசு முற்றாகவே அலட்சியப் போக்குடன் இருந்தது.

அது மாத்திரமல்ல `இப்பேரிடர்’ வந்துற்ற பிறகு அனைத்துப் பாடசாலைகளையும், அனைத்து மண்டபங்களையும், அனைத்து திரையரங்குகளையும், இன்னும் இருக்கக்கூடிய அத்தனைப் பெரிய கட்டடங்களையும் திறந்து விட்டு பொதுமக்களை அங்கு குடியேற வைத்திருக்க வேண்டும். அவர்களது பாதுகாப்புக்காக ஓரளவு வசதிகளும் செய்து கொடுத்திருக்க வேண்டும். ஒரு வேளை உணவாவது சமைத்து வழங்கியிருக்க வேண்டும்.குடிநீர், குழந்தைகளுக்கான பால்மா ஆகியனவற்றையாவது கொடுத்திருக்க வேண்டும். ஒன்றும் செய்யவில்லை தமிழ்நாட்டு அரசு. ஆனால், பிறர் கொண்டு வந்த நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதாவின் படம்போட்ட ஸ்ரிக்கரை ஒட்டத்தவறவில்லை.

ஆனால், இந்த உபகாரங்களை தனிநபர்களே முன்னெடுத்துச் செய்தார்கள். தன்னார்வுத் தொண்டர்களே அதனையும் செய்தார்கள். அவர்களில் தமிழ்நடிகர்களும், பிறமொழி நடிகர்களும் அடக்கம். இத்தனை இக்கட்டான தருணத்தில் பல மனிதர்கள், தம்மை நாம் கைகூப்பி வணங்க வைத்திருக்கிறார்கள். அந்த நாட்களில் முகநுÖலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். உதவி கேட்கும் கோரல்கள் அல்ல, உதவி கொடுக்கும் குரல்கள்அங்கு நிறைய வந்துகொண்டிருந்தன. `இன்ன இடத்தில் இவ்வளவு உணவு உண்டு’ `இந்த இலக்கத்தில் தொடர்புகொண்டால் இந்த உதவி பெறலாம்’ என்று இணையவெளி, முகநூல் வழி இளைஞர்கள், துன்பப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தனர்.

அது மாத்திரமன்றி பலர் செய்த உதவிகளை பல இடங்களில் குறிப்பாக முகநூல்களில், வேறு பத்திரிகைகளில் வாசிக்கக்கிடைத்த போது உண்மையில் அழுகைதான் வந்தது. அத்தனை அற்புதமான மனிதர்கள் அவர்கள். “தூரத்திலிருந்து எம் துயர் அறிந்தவுடன் – ஓரத்தில் வந்து உதவி புரிந்தனர் – வாரப்பாட்டோடு மனிதர்கள்” என்ற மஹாகவியின் கவிதை வரிகள் ஞாபகம் வந்தது. `மனிதர் பலர் மேன்மையானவர், தெய்வத்துக்கு சமமானவர்பீஎன்ற என் கணிப்பு மீண்டும் சரியென நிரூபிக்கப்பட்டவற்றை ஆனந்தக் கண்ணீர் கொண்டு அனுபவித்தேன்.
முகநுÖலில் நான் வாசித்தவற்றில் ஓர் உதாரணம் “வாழ்வதற்கு ஏற்ற நகரம் என்ற பட்டியலில் பி.பி.சி சென்னையைச் சேர்த்தபோது அதன் உள்கட்டமைப்பு தான் காரணம் என்று நினைத்தேன். இன்று தான் சென்னையின் மக்களே அதன் காரணம் என உணர்ந்தேன்பீபீ.

இப்பேரிடர்கள் உலகில் எங்கும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்ந்ததன் சாத்தியப்பாடுகள் என்ன காரணம் அறிய சில கவிதை வரிகளைச் சொல்கிறேன். `அந்தக் காலத்தில் தண்ணீர் இருந்தது: ஆறுகள் நிறைய தண்ணீர் இருந்து : ஏரிகள் நிரம்ப தண்ணீர் இருந்தது : தண்ணீர் திணறத் திணற பாட்டில்களில் அடைத்து :விற்பனையைத் தொடங்கினோம் : தண்ணீரின் நெஞ்சக் குழி அதிர தூண்களை இறக்கி கட்டடங்கள் எழுப்பினோம் (சுகுணா திவாகர்)

கவிதைகளுக்கு மேலாக நான் என்ன சொல்லி விடப்போகிறேன் ? தெரிகின்ற உண்மை ஒன்று தான், மக்களுக்காக மனிதத்துக்காக அரசு ஒன்றும் இல்லை. முடிவிலியான ஆயுட்காலம் கொண்ட பிளாஸ்டிக்பொருட்களின் பாவனையும் இப்பேரிடருக்கான காரணமாகும். நான் அறிந்த வரையில் மேலை நாடுகளில் பிளாஸ்டிக் பாவனைக்கான கட்டுப்பாடு ஓரளவு இருக்கின்றது. தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்சியின் போதும் அவ்வாறே இருந்தது.

இவ்வாறான துயர சம்பவங்கள் நிகழும் போது தான் நமக்காக ஒரு நாடு இல்லையெனும் கொடுமையை வெகுவாக உணர்கிறோம். இந்தியாவில் எந்த மாநிலமும் இவ்வாறான ஒரு பேரிடரை அனுபவித்ததில்லை. வெள்ளம் முதலாவது தளத்தை நிறைத்து இரண்டாம் தளத்தை புகுந்ததை வைத்து வெள்ளத்தின் அனர்த்ததை உணர்ந்து கொள்ள முடியும். “சாலைகளில் ஆறு, வீதிகளில் நதி, வீடுகளில் கடல்” என்று சொல்லப்பட்டது.

ஆனால், இந்திய மத்திய அரசோ இதனை பேரிடர் என்று அறிவிப்பதற்கு தயாராக இல்லை. அதனால் நிவாரணம் வழங்க முடியாது என்றது மத்திய அரசு. வழங்கத் தேவையில்லை என்றார் சுப்பிரமணியன் சுவாமி இந்த மாற்றாந்தாய் மனப்பாங்கு எங்கிருந்து வருகிறது, ஏன் வருகிறது? மாற்றாந்தாயாக மத்திய அரசு இருப்பதுதான் காரணம். வேறு என்ன காரணம்? இதுவே வட இந்தியமாநிலங்களில் நிகழ்ந்திருந்தால் இப்படி மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்குமா? இதனைத் தான் அறிஞர்அண்ணா எப்போதோ கூறினார் பிவடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது’ என்று. பிறநாட்டு உதவி, நிவாரணங்களும் கூட சென்னையை சென்று சேரவில்லை.

இது தான் எமக்கான கடமை விரிந்த நேரம், நமதுகடனை தீர்க்க வேண்டிய காலம். 2009இல் முள்ளிவாய்க்கால் துயர் நிகழ்ந்த நேரம் செல்வி ஜெயலலிதா ஒரு வார்த்தை உதிர்த்தார். “போர் என்று ஒன்று நடந்தால் மக்கள் இறக்கத்தானே வேண்டும்” இரக்கமற்ற கொடூர வார்த்தைகளைக் கொட்டியவர் ஜெயலலிதா. ஆனால், தமிழ் நாட்டு மக்கள் அச்சமயம் ஈழத்துத் தமிழர்களைத் தாங்கிநின்றவர்கள். தொப்புள் கொடி உறவாக சொல்லும் படி நின்றார்கள். தமது உயிரை தீக்குத் தின்னக் கொடுத்திருந்தவர்கள் எத்தனைப் பேர். மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் எவ்வளவு நடந்தது ? தமிழ் நாட்டு மக்கள் இலட்சக்கணக்கில் எமக்காக அணிதிரண்டார்கள். ஈழத்தமிழர், தமிழ் நாட்டு மக்கள், புலம் பெயர் ஈழத்தவர் என்று முக்கூட்டு நிலைப்பாடு எடுத்துத் தான் எம் விடுதலையைவென்றெடுக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு கைகொடுக்க வேண்டியது எம் கடமை. இப்போது கை கொடுப்போம், முதுகைத் தடவுவோம், ஆறுதலாக நிற்போம்,ஆதரவுக் குரல் கொடுப்போம். அனைத்து வழிகளிலும் உதவுவோம் நண்பர்களே!